குடிமைப் பணி பயிற்சி மையத்தை திறக்க மாணவர்கள் கோரிக்கை - EDUNTZ

Latest

Search Here!

Friday, 30 July 2021

குடிமைப் பணி பயிற்சி மையத்தை திறக்க மாணவர்கள் கோரிக்கை

கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று பயிற்சிக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு அவர்கள் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையத்தில் 225 பேர் முழு பயிற்சிக்கும், 100 பேர் பகுதிநேர பயிற்சிக்கும் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் கரோனா பெருந்தொற்று காரணமாக பயிற்சி மையம் தற்காலிகமாக மூடப்பட்டது. முதல்நிலைத்தேர்வு அக்டோபர் 10-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வுக்கு குறுகிய நாட்களே இருப்பதால் நேரடி பயிற்சி பெற வசதியாக இந்த பயிற்சி மையத்தை உடனடியாக திறக்க வேண்டும்.

No comments:

Post a Comment