‘கபசுர குடிநீரை’ உலகறிய செய்த ஆராய்ச்சியாளர்..! - EDUNTZ

Latest

Search here!

Saturday 10 July 2021

‘கபசுர குடிநீரை’ உலகறிய செய்த ஆராய்ச்சியாளர்..!



லயோலா கல்லூரியின் முன்னாள் பேராசிரியரான வின்சென்ட், இதை அறிவியல் பூர்வமாய் நிரூபித்திருப்பதுடன், உலக கவனத்தை ‘கபசுர குடிநீர்’ பக்கம் திருப்பி இருக்கிறார். கல்வி பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், இவரது ஆய்வுகளும், ஆராய்ச்சிகளும் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ‘‘கம்பம் பகுதி, புதுபட்டி என்னுடைய சொந்த ஊர். மதுரையில் இளங்கலை பட்டமும், நெல்லையில் முதுகலை பட்டமும் பயின்று, சென்னை லயோலா கல்லூரியில் பி.எச்.டி. ஆராய்ச்சிகளை முடித்து, அங்கேயே 1996-ம் ஆண்டு பேராசிரியராக பணியில் சேர்ந்தேன். அங்குதான் என்னுடைய ஆராய்ச்சி பணிகளும் தொடங்கின’’ என தன்னை அறிமுகப்படுத்தி கொள்ளும் வின்சென்ட், மக்கள் மற்றும் அரசாங்கம் தொடர்புடைய பல பிரச்சினைகளுக்கு, அறிவியல் ஆராய்ச்சிகளின் மூலம் விடை கண்டிருக்கிறார். எய்ட்ஸ் விழிப்புணர்வு குழு, எளிமையான மழைநீர் சேமிப்பு அமைப்பு உருவாக்கம், வேலைவாய்ப்பு தகவல் பரிமாற்ற குழு... என கல்லூரி மாணவர்கள் மத்தியில் பல புதுமைகளை விதைத்திருக்கிறார். குறிப்பாக சென்னை மாநகரின் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான மழைநீர் வடிகால் ஆராய்ச்சி மற்றும் வழிகாட்டுதலில் மிக முக்கிய பங்காற்றியிருக்கிறார். ‘‘மழைக்காலங்களில், சென்னை மாநகருக்குள் வெள்ள நீர் தேங்காமல் இருப்பதற்கான தீர்வை ஆராய்வதற்காக, பிரபல கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்களை கொண்டு சிறப்பு ஆராய்ச்சி குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதில் நானும் ஒருவனாக அங்கம் வகித்து, 3 ஆண்டுகள் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டேன். சென்னையின் நில அமைப்பை, செயற்கைகோள் வரைப்படமாக மாற்றி அதில் எந்தெந்த பகுதிகளில் வெள்ள நீர் தேங்குகிறது, அதை எவ்வழியாக கடலுக்குள் திருப்பி விடலாம், மழைநீரை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்தலாமா, எந்தெந்த பகுதிகளில் கூடுதலாக பாதாள சாக்கடை இணைப்பு அமைக்கப்படவேண்டும்... போன்றவற்றை ஆராய்ந்து, விரிவான அறிக்கையை தயாரித்து மாநில அரசிடம் சமர்ப்பித்தோம். அதை தமிழக அரசும் ஏற்றுக்கொண்டு, பயன்படுத்தியது. வெள்ளநீர் தேக்கத்தை குறைத் தது’’ என்றவர், சென்னை மாநகராட்சியின் சில பகுதிகளில், மக்கும்-மக்காத குப்பைகளை தரம் பிரிப்பு வேலைகளை ‘பைலட் புராஜெக்ட்’ ஆக முயன்று பார்த்ததோடு, எல்லா பகுதிகளிலும் நடைமுறைப்படுத்த ஆலோசனை அறிக்கை தயாரித்து கொடுத்திருக்கிறார். அதோடு தமிழ்நாடு அறிவியல் மன்ற உறுப்பினர் செயலாளராகவும் அங்கம் வகித்திருக்கிறார். ‘‘அறிவியல் துறையின் வளர்ச்சிகளை, தமிழக அரசின் வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்துவது, புதுப்புது தொழில்நுட்பங்களை சம்பந்தப்பட்ட அரசு துறைக்குள் புகுத்துவது எப்படி... போன்றவற்றை விளக்குவதே, இந்த குழுவின் நோக்கம். உதாரணத்திற்கு, நீர் மேலாண்மையை மேம்படுத்த, ஒருங்கிணைந்த பண்ணை மூலமாக லாபத்தையும், வேலைவாய்ப்பையும் அதிகப்படுத்த... என 14 துறைகளில், அறிவியலை உட்புகுத்தி, விரிவான ஆய்வு அறிக்கையை தயாரித்து கொடுத்தோம். அந்த குழுவில் என்னோடு எஸ்.பி.தியாகராஜன், மன்னர் ஜவகர் போன்ற மிக முக்கிய நபர்களும் அங்கம் வகித்தனர். இருப்பினும் 2011-ம் ஆண்டு நடந்த ஆட்சி மாற்றத்தினால் அவை காகித அளவிலேயே முடங்கி விட்டன. நானும் என்னுடைய கல்லூரி ஆராய்ச்சி பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டேன்’’ என்றவர், நோய் பரவலுக்கான காரணங்களையும், கட்டுப்படுத்தும் முறைகளையும் கடந்த 3 ஆண்டுகளாய் ஆராய்ந்து, கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டிடம் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார். இதற்கு அடுத்தபடியாகவே கபசுர குடிநீரை உலகறிய செய்திருக்கிறார். ‘‘கபசுர குடிநீரில் இருக்கும் 145 மூலக்கூறுகளில் 120 மூலக்கூறுகள் கொரோனா வைரஸின் செயல்பாடுகளையும், வளர்ச்சி யையும் குறைத்து இறுதியில் வைரஸை அழித்து விடுகிறது. இதை தென் கொரியா, எத்தியோப்பியா நாடுகளில் வாழும் உலக ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டதோடு, அதை முறைப்படி அறிக்கையாக்கி வெளியிட்டோம். இதன் காரணமாய் கபசுர குடிநீருக்கு உலக தர அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அதேசமயம் தமிழ் மருந்தான கபசுர குடிநீர் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துகிறது என்பதையும், அறிவியல் பூர்வமாய் நிரூபித்திருக்கிறோம்’’ என்று, மனநிறைவாய் முடித்தார்.

No comments:

Post a Comment