இ.சி.எஸ்.,சில் (ECS , 'எலக்ட்ரானிக் செக் கிளியரன்ஸ்') எப்போதும் கவனம் தேவை! - EDUNTZ

Latest

Search here!

Saturday 10 July 2021

இ.சி.எஸ்.,சில் (ECS , 'எலக்ட்ரானிக் செக் கிளியரன்ஸ்') எப்போதும் கவனம் தேவை!

வங்கிகளில் மாதம்தோறும் செலுத்தும் கட்டணங்கள், தொகைகளுக்காக நாம் வழங்கும், இ.சி.எஸ்., எனப்படும், 'எலக்ட்ரானிக் செக் கிளியரன்ஸ்' எனும் முறையில் உள்ள சாதக, பாதக அம்சங்களை கூறுகிறார் தனியார் வங்கி அதிகாரி மணியன் கலியமூர்த்தி: இ.சி.எஸ்., முறையை நிர்வகிக்கும் அமைப்பின் பெயர், தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ். இதை சுருக்கமாக, 'நாச்' என அழைக்கின்றனர். இ.சி.எஸ்., முறையை பயன்படுத்தி, ஆட்டோமேடிக் டெபிட் ஆப்ஷன் மூலம் மின்சாரம், சமையல் காஸ், தொலைபேசி கட்டணம், குடிநீர் கட்டணம், வங்கிகளுக்கான தவணைத் தொகை, மியூச்சுவல் பண்ட் முதலீடு, இன்சூரன்ஸ் பிரீமியம் போன்றவற்றை செலுத்தலாம். இந்த, ஆட்டோமேடிக் டெபிட் பரிவர்த்தனைகள் தோல்வி அடையாமல் இருக்க, வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் போதிய பணத்தை இருப்பு வைத்திருக்க வேண்டும். அவ்வாறு இருப்பு வைத்திருக்க முடியாத சூழ்நிலை, சமீப காலமாக எழுந்துள்ளதாக, நாச் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.இ.சி.எஸ்., சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியாது. இ.சி.எஸ்., சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளரின் செக் ஒரு முறை, பணம் இல்லை என திரும்பி வந்தாலும், 600 ரூபாய் அபராத கட்டணத்தை, ஜி.எஸ்.டி.,யுடன் சேர்த்து செலுத்த வேண்டும். 
இந்த அபராத தொகை, வங்கிக்கு வங்கி மாறுபடும்.எனினும், பெரும்பாலான வங்கிகள், வங்கிக்கடன்களுக்கான இ.சி.எஸ்., தோல்வியின் போது மட்டும் தான் அபராத தொகை வசூலிக்கின்றன. இன்சூரன்ஸ் பிரீமியம் பாலிசிக்கான இ.சி.எஸ்., தோல்வி அடையும் போது, பெரும்பாலான வங்கிகள் அபராத தொகை வசூலிப்பதில்லை. அதுபோல, டீமேட் கணக்குடன் இணைந்திருக்கும் மியூச்சுவல் பண்ட் மற்றும் எஸ்.ஐ.பி., எனப்படும் மாதாந்திர முதலீட்டு தவணைகளுக்கும் அபராத கட்டணம் வசூலிப்பதில்லை. அதே நேரம், ஆன்லைன் எஸ்.ஐ.பி., எனப்படும், ஆன்லைன் மூலம் குறிப்பிட்ட தொகையை மாதம்தோறும் செலுத்தி முதலீடு செய்யும் போது, இ.சி.எஸ்., தோல்வி அடைந்தால், அபராத கட்டணம் வசூலிக்கப்படுகிறது.பொதுவாகவே இப்படி மூன்று முறை தோல்வி அடையும் போது, ஒருவரின், 'சிபில்' ஸ்கோர் எந்த பாதிப்பையும் சந்திக்காது. அதற்கு மேல் ஆகும் போது, சிபில் ஸ்கோர் தானாகவே குறைந்து விடும். இந்த ஸ்கோர் குறையும் போது, வாடிக்கையாளருக்கும், நிதி நிறுவனத்திற்கும் இடையேயான நம்பிக்கை பாதிக்கப்படுகிறது. தவணைகளை ஒழுங்காக செலுத்தும் வாடிக்கையாளரைத் தான் வங்கிகளுக்கு பிடிக்கும். அந்த வாடிக்கையாளரை எந்த வங்கியும் கைவிடாது. எனவே, அத்தகைய வாடிக்கையாளராக இருக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும்!

No comments:

Post a Comment