01.08.2021 நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்கள் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 4 August 2021

01.08.2021 நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்கள் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் சென்னை 6 ந.க.எண்.040678/23/இ12021 நாள்.04.08.2021 

பொருள்: 

பள்ளிக்கல்வி - 01.08.2021 அன்றைய நிலவரப்படி அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் (பட்டதாரி ஆசிரியர்கள் மேற்கொள்ள ஏதுவாக மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் அனுமதிக்கப்பட்ட இடைநிலை /பட்டதாரி ஆசிரியர்களின் விவரங்களை-கல்வி மேலாண்மை தகவல் மைய EMIS இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள அறிவுறுத்தல் சார்பு. 

பார்வை: 

1)அரசாணை எண்.525 பள்ளிக்கல்வி (டி1) துறை நாள்.29.12.1997 

2)அரசாணை எண்.231 பள்ளிக்கல்வி (சி2)துறை நாள்.11.8.2010

ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்தில் 01.08. அன்றைய நிலவரப்படி அரசு/நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10 வகுப்புகள் வரை உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் (BT Staff Fixation) பணியிடங்கள் நிர்ணயம் செய்வது நடைமுறையில் உள்ளது. இதனடிப்படையில் இக்கல்வியாண்டிற்கான (2021-22) அரசு! நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2021 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் (BT Staff Fixation) சார்பான பணிகள் கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை (EMIS) மூலமாக மேற்கொள்ளப்படவிருக்கிறது. 

எனவே, இப்பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் EMIS இணையதளத்தில் மேற்படி பள்ளிகள் சார்ந்த கீழ்க்குறிப்பிட்ட விவரங்களைப் பதிவேற்றம் செய்திட அறிவுறுத்தப்படுகிறார்கள். 

1) மாவட்டத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து அரசு / அரசு மாதிரிப் பள்ளிகள் / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2021 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையினை வகுப்பு வாரியாகவும் (Class wise) மற்றும் தமிழ் வழி/ ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் ஆகியவற்றினை பதிவேற்றம் செய்தல் தொடர்பாக. 

2) ஒவ்வொரு பள்ளியிலும் அரசால் அனுமதிக்கப்பட்ட (Sanctioned Post details) அனைத்துவகை ஆசிரியர்கள் பணியிடங்களின் விவரங்களை பள்ளியின் அளவுகோல் பதிவேட்டின்படி (Scale Register) ஒப்பிட்டு சரிபார்த்து பதிவேற்றம் செய்திடல் வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும்போது இப்பணியிடங்கள் கடந்த ஆண்டுகளில் ஆசிரியரின்றி உபரி எனக் கண்டறியப்பட்டு (Surplus post without person) இயக்குநரின் பொதுத்தொகுப்பிற்கு சரண் செய்யப்பட்டிருந்தால் அப்பணியிடங்களை எக்காரணம் கொண்டும் மீளவும் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களாகக் கருதி பதிவேற்றம் செய்தல் கூடாது. 

3) அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் அனைத்துவகை ஆசிரியர்கள் சார்பான முழு விவரங்களையும் (Teacher Profile) எவருடைய பெயரும் விடுபடாமல் EMIS இணையதளத்தில் உள்ள கலத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும். 

இணை இயக்குநர் பணியாளர் தொகுதி) 

பெறுநர் 

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் (மின்னஞ்சல் மூலமாக)  

நகல்: 

கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை சென்னை 6 தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டும் அனுப்பலாகிறது.







No comments:

Post a Comment