இன்றைய 10 சொற்கள்! (தமிழ் - ஆங்கிலம்) - EDUNTZ

Latest

Search here!

الجمعة، 6 أغسطس 2021

இன்றைய 10 சொற்கள்! (தமிழ் - ஆங்கிலம்)

 இன்றைய 10 சொற்கள்!

1. Mortgage (மார்ட்கேஜ்) - அடமானம்.
நான் என் வீட்டை அடமானம் வைத்துள்ளேன்.
I mortgaged my house.
2. Debit (டெபிட்) - கொடுக்கப்பட வேண்டிய கடன்.
எனது கணக்கிலிருந்து ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட வேண்டிய கடன் எடுக்கப்பட்டது.
Thousand Rupees was debited from my account.
3. Demand draft (டிமாண்ட் டிராப்ட்) - கேட்பு வரைவோலை.
கேட்பு வரைவோலையானது எங்களுடைய நிறுவனத்தின் பெயரால் எடுக்க வேண்டும்.
The demand draft should be drawn in favor of our company name.
4. Deposit (டெபாசிட்) - சேமி.
நாங்கள் ஒரு பெரிய தொகையை வங்கியில் சேமித்து வைத்துள்ளோம்.
We have deposited a huge amount in the bank.
5. Withdrawal (வித்ட்ராவல்) - திரும்பப் பெறுதல்.
கணக்கிலிருந்து பணத்தை திரும்பப் பெறும் வழிமுறை மிகவும் எளிமையானது.
The process of withdrawal of amount from account is easy.


6. Savings account (சேவிங்ஸ் அக்கவுண்ட்) - சேமிப்பு கணக்கு.
நான் வங்கியில் ஒரு சேமிப்பு கணக்கை துவங்கினேன்.
I have started a saving account in the bank.
7. Credit card (க்ரெடிட் கார்டு) - கடன் அட்டை.
நான் கடன் அட்டை வைத்துள்ளேன்.
I have a credit card.
8. Challan (சலான்) - செலுத்துச் சீட்டு.
நாம் செலுத்துச் சீட்டை பணம் செலுத்துவதற்கு நிரப்ப வேண்டும்.
We should fill the challan to pay the amount.
9. Credit (க்ரெடிட்) - கடன்.
என்னுடைய கடன் வரம்பை மீறிவிட்டது.
My credit limit was exceeded.
10. Cheque (செக்) - காசோலை.
நாம் பணம் கொடுப்பதற்கு காசோலையை பயன்படுத்தலாம்.
We can use cheque for the payment.

ليست هناك تعليقات:

إرسال تعليق