10ஆம் வகுப்பு தமிழ் ஜூலை மாத ஒப்படைப்புகளுக்கான விடைக் குறிப்புகள் - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 31 August 2021

10ஆம் வகுப்பு தமிழ் ஜூலை மாத ஒப்படைப்புகளுக்கான விடைக் குறிப்புகள்

ஒப்படைப்பு -2- விடைக்குறிப்புகள்
ஜூலை மாதத்திற்கான ஒப்படைப்புகள்
ஒப்படைப்புகள் -2
விடைக் குறிப்புகள்



பத்தாம் வகுப்பு

இயல்-2

இயற்கை, சுற்றுச்சூழல் விடைக்குறிப்புகள்

பகுதி-அ

1)இயற்கை
2) மென்காற்று
3) இளங்கோவடிகள்
4)இருத்தல்
5) முல்லைப்பாட்டு
6)தொகைநிலைத்தொடர்
7) பண்புத்தொகை
8) பண்புத்தொகை
9) பாஞ்சாலி சபதம்
10) பாரதியார்

11) யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு செய்யுளும், உரைநடையும் கலந்து எழுதப் பெறுவது வசனகவிதை ஆகும்.

12) " வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்
ஆயுள் பெருக்கம் உண்டாம்” என்கிறார் ஔவையார்

13) கிழக்கு-கொண்டல்
மேற்கு கோடை
வடக்கு வாடை
தெற்கு தென்றல்

14) உயிர்வளி (ஆக்சிஜன்)
விரிச்சி: ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாதோ? என ஐயம் கொண்டபெண்கள் மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் ஊர் பக்கத்தில் போய், தெய்வத்தைத் தொழுது நின்று அயலார் பேசும் சொற்களைக் கூர்ந்து கேட்பர். அவர்கள் நல்ல சொல்லைக் கூறினால் தம் செயல் நன்மையில் முடியும் என்றும், தீய மொழியைக் கூறினால் தீமையில் முடியும் என்றும் கொள்வர்.

பகுதி-ஆ

16) அ).அமிலமழை உருவாதல்
ஆ) குழந்தைகளின் மூளைவளர்ச்சி குறைதல்
இ.)காய்ச்சல், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் உருவாதல்
ஈ.) மிகுந்த உயிரிழப்பு ஏற்படுதல்

17) கார்காலச் செய்திகள்:

அகன்ற உலகத்தை வளைத்து பெருமழை பொழிகிறது. திருமால், குறுகிய வடிவம் கொண்டுமாவலி மன்னன் நீர் வார்த்துத் தரும்பொழுது மண்ணுக்கும் விண்ணுக்குமாகப் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்றுள்ளது மழை மேகம். அம்மேகம் கடல் நீரைப் பருகி பெருந் தோற்றம் கொண்டு வலமாய் எழுந்து மலையைச் சூழ்ந்து விரைந்த வேகத்துடன் பெருமழையைப் பொழிகிறது. துன்பத்தைச் செய்கின்ற மாலைப்பொழுதில் முதிய பெண்கள் மிகுந்த காவலையுடைய ஊர்ப் பக்கம் சென்றனர் யாழிசை போன்று ஒலிக்கும் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரிக்கும் நறுமணம் கொண்ட அரும்புகள், அந்த மலர்ந்த முல்லை பூக்களோடு நாழியில் கொண்டு வந்த நெல்லையும் சேர்த்து தெய்வத்தின் முன் தூவினர். பிறகு தெய்வத்தைத் தொழுது தலைவிக்காக நற்சொல்
கேட்டு நின்றனர்.




இயல்-3

பண்பாடு

பகுதி-அ

1 ஓடு
2விருந்தோம்பல்
3 வினைத்தொகை
4 தொல்காப்பியர்
5தமிழர் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை செயல்
6செவ்விலக்கியம்
7 உரைத்தல்
8 மலைபடுகடாம்
9 இல்லம்
10 கேட்ட பாடல்

பகுதி-ஆ

11) குடும்பத்தலைவி நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும்நற்பண்பு கொண்டவள் என நற்றிணை குறிப்பிடுகிறது.

12) இளையான்குடி மாறநாயனார் வீட்டிற்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்கதானியமில்லாதபோது, அன்று விதைத்துவிட்டு வந்த விதைநெல்லை அரித்து வந்து, சமைத்து விருந்து படைத்தார் எனப் பெரிய புராணம் கூறுகிறது.

13) கொற்கை நகரத்தின் அரசர் அதிவீரராம பாண்டியன். தமிழ்ப் புலவராகவும் திகழ்ந்த இவர் இயற்றிய நூலே காசிகாண்டம். இவரின் மற்றொரு நூலான வெற்றிவேற்கை என்று அழைக்கப்படும் நறுந்தொகை சிறந்த கருத்துகளை எடுத்துரைக்கிறது. சீவலமாறன் என்ற பட்டப் பெயரும் இவருக்கு உண்டு. நைடதம், இலிங்கபுராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்ம புராணம்ஆகியனவும் இவர் இயற்றிய நூல்கள் ஆகும்.

14) ஒரு தொடரில் சொற்களுக்கு இடையில் சொல்லோ, உருபோ மறைந்து வராமல் வெளிப்படையாகப் பொருளை உணர்த்துவது தொகைநிலைத்தொடர் எனப்படும்.

(எ-டு) காற்று வீசியது, குயில் கூவியது.


15) முற்றுப் பெறாத வினை, வினைச் சொல்லைக் கொண்டு முடிவது வினையெச்சத்தொடர் ஆகும்ேபாடி மகிழ்ந்தனர். 'பாடி' என்னும் எச்சவினை மகிழ்ந்தனர் என வினையைக் கொண்டுமுடிந்துள்ளது.

பகுதி-ஆ

16) விருந்தினராக ஒருவர் வந்தால், அவரை வியந்து உரைத்தல்,
நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல், முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல் 'வீட்டிற்குள் வருக' என்று வரவேற்று அவர் எதிரில் நிற்றல். அவர் மனம் மகிழும்படி பேசுதல், அவர் அருகிலேயே அமர்ந்து கொள்ளுதல் அவர் விடைபெற்றுச் செல்லும்போது வாயில் வரை பின்தொடர்ந்து செல்லல் அவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல் ஆகிய ஒன்பதும் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கம் ஆகும்.


17) பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள். இரவில் சேர்ந்து தங்குங்கள்.
எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்து கொள்ளுங்கள். சிவந்த பூக்கள் கொண்ட மரங்களை உடைய பொருத்தமான பாதையில் செல்லுங்கள். அசையும் மூங்கில்கள் ஓசை எழுப்பும் கடின பாதையில் சென்று மலைச்சரிவில் உள்ள சிற்றுரை அடையுங்கள் அங்குள்ளவர்களிடம் பகைவரைப் பொறாமல் போர் செய்யும் வலிய முயற்சியும் மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள். அதன் பிறகு நீங்கள் உங்கள் வீட்டிற்குள் போவது போலவே அவர்களுடைய வீட்டிற்குள் உரிமையுடன் நுழையுங்கள். உங்கள் உறவினர் போலவே அவர்கள் உங்களுடன் பழகுவர். நீண்ட வழியைக் கடந்து வந்த உங்களின் துன்பம் தீர இனிய சொற்களைக் கூறுவர். அங்கே நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் தினைச்சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள் என்று ஒரு கூத்தன் மற்றொரு கூத்தனுக்கு கூறினார்.

No comments:

Post a Comment