பன்னிரன்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி புத்தகம் 0209.2021 அன்று வெளியிடப்பட உள்ளது. 


பெருநகர சென்னை மாநகராட்சியில் 32 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி பயில தேவையான ஆலோசனைகள் வழங்க பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனடிப்படையில், இன்னர்வீல் கிளப் ஆப் மெட்ராஸ் உடன் இணைந்து தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் உயர்கல்விக்கான வாய்ப்புகளையும். எதிர்கால வேலை வாய்ப்புகளையும் வழிகாட்டும் வகையில் 12ம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம், எப்படி ஜெயிக்கலாம் என்ற பயனுள்ள வழிகாட்டி நூலைத் தயாரித்துள்ளது. மாணவர்கள் உயர்கல்வி குறித்து யோசிக்கும்போது மருத்துவம், பொறியியல், அறிவியல், பி.காம், சட்டம், விஷுவல் கம்யூனிக்கேஷன் என ஏராளமான வாய்ப்புகள் குவிந்துகிடக்கின்றன. இதில் மாணவர்கள் ஆர்வத்துக்கும், திறமைக்கும் சவாலாக உள்ள படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். மாணவர்களின் ஆர்வத்தை ஆக்கப்பூர்வமாக மாற்றும் வல்லமை படைத்தது கல்லூரிகள். இந்த வழிகாட்டி புத்தகத்தில் கல்லூரி படிப்பையும், கல்லூரியையும் எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதில் ஆரம்பித்து ஒவ்வொரு படிப்பிலும் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றின் காரனமாக இந்த உயர்கல்வி வழிகாட்டு இணையவழி புத்தகம் ZOOM கானொலி வாயிலாக 02.09.2021 அன்று மதியம் 1230 மணியளவில் வெளியிடப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உயர் கல்விக்கான ஆலோசனை பெற ஆர்வமுள்ள மாணவர்கள் கீழ்கண்ட ZOOM முகவரி மற்றும் கடவு எண்ணை பயன்படுத்தி கானொலி வாயிலாக பயனடையுமாறுகேட்டுகொள்ளப்படுகிறது (விவரங்களுக்கு செய்தி குறிப்பைக் காணவும்)

Post a Comment

Previous Post Next Post

Search here!