143 கலை - அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - EDUNTZ

Latest

Search here!

Tuesday, 3 August 2021

143 கலை - அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

143 கலை - அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் கலை - அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 

2021ஆம் ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கை தமிழகம் முழுவதும் உள்ள 143 அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் தொடங்கவிருக்கின்றன. இதற்கான விண்ணப்பங்களை www.tngasa.org / www.tngasa.in ஆகிய இணையதளங்களின் மூலமாகப் பதிவுசெய்யலாம். கரோனா தொற்று காரணமாகத் தனியார் கல்லூரிகளில் பணம் செலுத்திப் படிக்க முடியாத நிலை பலருக்கும் இருக்கலாம். அவர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் அருகிலுள்ள அரசுக் கல்லூரிகளில் சேரலாம். கணினி வசதி, இணையதள வசதி இல்லாத மாணவர்களுக்கு உதவும் வகையில் மாவட்டம்தோறும் கல்வி உதவி மையங்கள் செயல்படுகின்றன. 

இந்த மையங்களின் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அட்மிஷன் ஃபெஸிலிடேஷன் சென்டர் (AFC) எங்கெல்லாம் இருக்கின்றன என்னும் பட்டியலும் மேலே குறிப்பிட்டுள்ள இணையதள முகவரிகளில் உள்ளது. ஒரு கல்லூரிக்கு விண்ணப்பம் அனுப்புவதற்கான கட்டணம் ரூபாய் 48. பதிவுக் கட்டணம் ரூபாய் 2. பட்டியல் வகுப்பினர்/பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. பதிவுக் கட்டணம் ரூபாய் 2 செலுத்தினால் போதும். விண்ணப்பக் கட்டணம், பதிவுக் கட்டணத்தை மாணவர்கள் தங்களின் டெபிட் அட்டை, கடன் அட்டை, இணையவழிப் பணப்பரிவர்த்தனை போன்றவற்றின் மூலம் செலுத்தலாம். 


இத்தகைய வசதி இல்லாத மாணவர்கள், கல்லூரி சேர்க்கை உதவி மையங்களுக்குச் சென்று The Director, Directorate of Collegiate Education, Chennai – 6 என்கிற பெயரில் 26/07/2021 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை வழியாகவோ அல்லது நேரடியாகப் பணமாகவோ செலுத்தலாம். மாணவர் சேர்க்கை வழிகாட்டி - கால அட்டவணையை மேற்குறிப்பிட்ட இணையதளங்கள் வாயிலாக மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் இணையதளம் மூலமாகத் தங்களின் விண்ணப்பங்களை 26/07/2021 முதல் பதிவுசெய்யத் தொடங்கலாம். விண்ணப்பம் பதிவுசெய்ய இறுதி நாள்: 10/08/2021. மேலும் விவரங்களுக்குத் தொடர்புகொள்ள: 044-28260098/28271911

No comments:

Post a Comment