பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பி.இ.எல்) நிறுவனத்தின் பெங்களூரு மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பயிற்சி பொறியாளர் (308) மற்றும் திட்ட பொறியாளர் (203) என 511 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1-8-2021 அன்றைய தேதிப்படி பயிற்சி பொறியாளர் பணிக்கு 25 வயதும், திட்ட பொறியாளர் பணிக்கு 28 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறைக்கு ஏற்ப பி.இ., பி.டெக் பாடப்பிரிவில் 4 ஆண்டு படிப்பு முடித்திருக்க வேண்டும். பயிற்சி பொறியாளர் வேலைக்கு பணி அனுபவம் தேவையில்லை.
திட்ட பொறியாளர் பணிக்கு இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மெரிட் லிஸ்ட், ஆன்லைன் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-8-2021.
மேலும் விரிவான விவரங்களை
என்ற இணையபக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment