தமிழ்நாட்டில் கோவிட்-19 நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள்
மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு - மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு
தற்போது
தமிழ்நாட்டில்
நடைமுறையில்
உள்ள
ஊரடங்கு
23.08.2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தில்
மாவட்ட வாரியாக நோய்த்தொற்றுப் பரவலின் தன்மை, அண்டை மாநிலங்களில்
நோய்த்தொற்றின் தாக்கம், ஊரடங்கு
கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த
விழிப்புணர்வு மற்றும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளின் செயலாக்கம்
குறித்து இன்று (21.08.2021)
தலைமைச் செயலகத்தில்
மாண்புமிகு
முதலமைச்சர் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கடந்த முறை எடுக்கப்பட்ட முடிவுகள்,
தற்போதுள்ள நோய்த் தொற்று நிலையின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய
முடிவுகள் குறித்து விரிவாக
ஆலோசிக்கப்பட்டன.
மேலும், மாநிலத்தில்
அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியம் மற்றும்
மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது
மேற்குறிப்பிட்ட
ஆலோசனைக்
கூட்டத்தின்
அடிப்படையில்,
நடைமுறையில் உள்ள கோவிட்-19 நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள்
06.09.2021
காலை
6.00
மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு
நீட்டிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment