தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் :பகுதி நேர பி.இ., / பி.டெக்., பட்டப்படிப்பு சேர்க்கை 2021-2022 - EDUNTZ

Latest

Search Here!

Friday, 6 August 2021

தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் :பகுதி நேர பி.இ., / பி.டெக்., பட்டப்படிப்பு சேர்க்கை 2021-2022

தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் 

பகுதி நேர பி.இ., / பி.டெக்., பட்டப்படிப்பு சேர்க்கை 2021-2022 (டிப்ளமோ பயின்ற மாணாக்கர்களுக்கு மட்டும்) 

தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 6 அரசு பொறியியல் கல்லூரிகள் 3 அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கு, தகுதி வாய்ந்த டிப்ளமோ படிப்பு முடித்த விண்ணப்பதாரர்களுக்கு பகுதி நேர முதலாமாண்டு B.E./B.Tech. பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் முறை: www.ptbe-tnea.com என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும். சான்றிதழ்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். 


தகுதி: 

விண்ணப்பதாரர் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளன்று டிப்ளமோ படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணிபுரிகிறவராகவோ அல்லது இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்திருந்தவராகவோ இருக்க வேண்டும். பதிவுக் கட்டணம்: பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர் Debit Card / Credit Card / Net Banking இணையதளம் வாயிலாக செலுத்தலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய: 


ஆரம்ப நாள் : 06.08.2021 

இறுதி நாள் : 05.09.2021 

இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தினை இணையதளம் வாயிலாக பதிவுசெய்வதற்கு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை (TFC) மையத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம். அனைத்து TFC மையங்களிலும் போதிய அளவில் கொரானா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் |Part-Time B.E./B.Tech. பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாக மட்டுமே நடைபெறும். மேலும் விவரங்கள் அறிய www.ptbe-tnea.com என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்



No comments:

Post a Comment