ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு பணிவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-8-2021 - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 21 August 2021

ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு பணிவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-8-2021

ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு பணிவாய்ப்பு 

இந்தியன் ஆயில் கார்பரேஷன் லிமிடெட் (ஐ.ஓ.சி.எல்) நிறுவனத்தில் தொழில் பழகுனர் பயிற்சி அடிப்படையில் டிரேடு, டெக்னீசியன் அப்ரண்டிஸ் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரேடு பிரிவில் பிட்டர், எலக்ட்ரீஷியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், மெஷினிஸ்ட், சிவில், அக்கவுண்டண்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், டெக்னீசியன் பிரிவில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமெண்டல், சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என 480 பயிற்சி இடங்களுக்கு ஆட்தேர்வு நடைபெறுகிறது. 
இதில் தமிழ்நாடு, புதுச்சேரியில் மட்டும் 194 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளது. சம்பந்தப்பட்ட பணி பிரிவில் டிப்ளமோ, ஐ.டி.ஐ,, பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விதிகளுக்கு ஏற்ப வயது தளர்வும் உண்டு. விண்ணப்ப நடைமுறை சார்ந்த விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு http://iocl.onlinereg.in/ioclsrreg0821/Home.aspx என்ற இணைய தளத்தை பார்வையிடலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-8-2021

No comments:

Post a Comment