தகுதியானவர்களை தேர்வு செய்ய குழுக்கள் அமைப்பு: 385 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - EDUNTZ

Latest

Search here!

الجمعة، 6 أغسطس 2021

தகுதியானவர்களை தேர்வு செய்ய குழுக்கள் அமைப்பு: 385 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

385 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணண் விருது வழங்கப்பட இருக்கிறது. தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 385 ஆசிரியர்களுக்கு விருது பள்ளிக்கல்வித்துறை 37 வருவாய் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் 2020-21-ம் கல்வியாண்டு முதல் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்க தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கு மாவட்ட மற்றும் மாநில அளவில் தேர்வு குழுக்கள் அமைத்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருக்கிறது. 


அதன்படி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்திய பள்ளிகள், சமூக பாதுகாப்பு துறை பள்ளிகள் என மொத்தம் 385 ஆசிரியர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. அதன்படி, மாவட்ட தேர்வுக்குழு ஆசிரியர்களின் பட்டியலை வருகிற 14-ந்தேதிக்குள் மாநில தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு பரிந்துரை செய்யப்படவேண்டும் என்றும், அதன் அடிப்படையில் மாநில தேர்வுக்குழு இறுதி பட்டியலை தயாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 


வழிமுறைகள் 

அவ்வாறு ஆசிரியர்களை தேர்வு செய்யும்போது சில வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து வகை ஆசிரியர்களும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். அரசியலில் பங்குபெற்றும் அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களின் பெயர்கள் கண்டிப்பாக பரிந்துரைக்கக்கூடாது. கல்வியை வணிகரீதியாக கருதி செயல்படும் ஆசிரியர்களும், நடத்தை விதிகளுக்கு முரணாக இருக்கும் ஆசிரியர்களும் இந்த விருதுக்கு தகுதியற்றவர்கள் என்பது உள்பட பல்வேறு வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிலும் இந்த ஆண்டு கூடுதலாக ஒரு வழிமுறை இணைக்கப்பட்டுள்ளது. அதாவது, தேர்வு செய்யப்படும் ஆசிரியர் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இணையவழி கல்வி உள்ளிட்ட மாணவர்களை நேரடியாக சென்றடையும் வகையில் கல்வி பணியாற்றிருக்க வேண்டும். அவ்வாறு பணி செய்யாத ஆசிரியர்களின் பெயரை அறவே தவிர்க்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. SOURCE NEWS 

ليست هناك تعليقات:

إرسال تعليق

Comments System

[blogger][disqus][facebook]