ஐ.டி.ஐ. தொழில் பழகுநர் பயிற்சிக்கு
ஆகஸ்ட் 6, 7 ஆம் தேதிகளில் நேர்காணல்
தமிழ்நாடு மின்வாரியத்தின் கோவை மின் பகிர்மான
தெற்கு வட்டத்தில் ஐ.டி.ஐ. கல்வி பயின்றவர்களுக்கான தொழில் பழகுநர்
பயிற்சிக்கு வரும் 6,7 ஆம் தேதிகளில் நேர்காணல் நடைபெறுகிறது.
தெற்கு வட்டத்துக்குள்பட்டமின்வாரிய அலுவலகங்களில் 2021-2022
ஆம் ஆண்டுக்கான ஐ.டி.ஐ. தொழில் பழகுநர் பயிற்சிக்கு எலெக்ட்ரீசியன்,
ஒயர்மேன், சர்வேயர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், இன்ஸ்ட்ருமென்ட்மெக்
கானிக், டிராப்ட்ஸ்மேன் சிவில் பயிற்சி பெற்ற 70 பேர் தொழில் பழகுநர்க
ளாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தின் விதிகளுக்குள்பட்டு தகு
தியின் அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு
செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டு பயிற்சிக் காலத்தில், மாதாந்திர உதவித்
தொகையாக ரூ.7,700 வழங்கப்படும்.
ஆர்வமுள்ளவர்கள், காந்திபுரம் டாடாபாத் பகுதியில் அமைந்துள்ள
மின் பகிர்மான தெற்கு வட்ட மேற்பார்வைப் பொறியாளர் மத்திய அலு
வலக வளாகத்தில் ஆகஸ்ட் 6, 7 ஆம் தேதிகளில் காலை 9.30 மணிக்கு
தொடங்கும் நேர்காணலில், கல்விச் சான்று, மாற்றுச் சான்று, ஜாதிச்
சான்று, வேலைவாய்ப்பு அலுவலக அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்
கான சான்றிதழ் ஆகியவற்றின் உண்மை, நகல்களுடன் நேரில் கலந்து
கொள்ளலாம் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment