8ஆம் வகுப்பு தமிழ் ஜூலை மாத ஒப்படைப்புகளுக்கான விடைக் குறிப்புகள் - EDUNTZ

Latest

Search here!

Tuesday, 31 August 2021

8ஆம் வகுப்பு தமிழ் ஜூலை மாத ஒப்படைப்புகளுக்கான விடைக் குறிப்புகள்

ஒப்படைப்பு-2- விடைக்குறிப்புகள்

வகுப்பு 8

இயல் - 2

ஈடில்லா இயற்கை

விடைக் குறிப்புகள்

| ) ஒரு மதிப்பெண் வினா

1. நெல்குத்தும்போது

2 குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்

3. கொங்கு மண்டலம்

4. பழங்கள் கொட்டியதால் சேதமடைந்தன.

5.பாலூறும் மரத்தில் இருந்து ஒழுகும் திரவம்

5. சுகுவாமிஷ் பழங்குடியினர்

7. ஆறுகள்

8. கண்ணன் ஓடினான்

9. ஏவல் வினைமுற்றுத்தொடர்.

10. மேய்ந்தது

பகுதி-ஆ

II. சிறுவினா

1. நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப் படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது,

2.ஆர்க்காடு முதல் மைசூர் வரை வீசிய புயலால் சாலைகளில் சென்ற மக்கள் தடுமாறித் தவித்தனர்.

3.இந்தக் காற்றானது அனைத்து உயிர்களையும் காக்கிறது. இவ்வுணர்வுகளைச் சுமந்து நிற்கும் காற்றின் இன்றியமையாமையை, நாங்கள் நிலத்தை விற்றுவிட நேர்ந்த பின்னரும் நீங்கள் மறக்கவே கூடாது,

4. நாங்கள் காற்றை மிகவும் மதித்துப் போற்றுபவர்கள். விலங்குகள், மரங்கள்,மனிதர்கள் உள்ளிட்ட யாவற்றுக்கும் சுவாசித்தல் பொதுவானது. பொதுவான ஒருற்றையே இவை யாவும் சுவாசிக்கின்றன. எனவே காற்றைப் பாதுகாக்க வேண்டும்.

5.இயற்கை வளம், ஆறுகள் மலைகள், காடுகள், பறவைகளின் வாழிடம் சுத்தமான காற்று

6.செய்பவர்,

கருவி நிலம், செயல், காலம்,

செய்பொருள்

7.வியங்கோள் வினைமுற்றுவிகுதிகள் - க , இய, இயர் , அல்

பகுதி - இ

III. பெருவினா

1.ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன :

நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது.

விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது.

குளர்ச்சியைத் தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கின்றது.

நெஞ்சில் இரக்கம் இல்லாதவர்கள் வெட்கப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்

பைக் கொடையாகத் தருகிறது.

2.நிலம்

எங்கள் கால்களைத் தாங்கி நிற்கும் இந்த நிலமானது எம்முடைய பாட்டன்மார்கள் எரிந்த சாம்பலால் ஆனது.

இந்நிலமே எங்கள் தாயாகும். எமது உறவு முறையாரின் வளமான வாழ்வால் ஆனதேஇந்நிலமாகும்.

இதனை எங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது போல் உங்கள் குழந்தைக

ளுக்கும் நீங்கள் சொல்லிக் கொடுங்கள் அப்போது தான் அவர்கள் இந்நிலத்தை மதிப்பார்கள்.

நீர்

ஏரிகளில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள், எம்மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை

நினைவு கூர்பவை. இந்த நீரின் முணுமுணுப்புகள் எம் பாட்டன்மார்களின் குரல்களே ஆகும்.

இந்த ஆறுகள் யாவும் எம் உடன் பிறந்தவர்கள். இவர்கள் தாம் எமது தாகத்தைத் தீர்க்கிறார்கள். எம்மக்களின் தோணிகளையும் இவர்களே சுமந்து செல்கின்றனர். குழந்தைகளுக்கு உணவளிக்கின்றனர். இங்குள்ள ஓடைகளிலும் ஆறுகளிலும் ஓடும் வனப்புமிகு நீரானது வெறும் தண்ணீரன்று; எமது மூதாதையரின் குருதியாகும். இவ்வாறு நீர்நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளார்.

காற்று

எம்மக்கள் யாவரும் அமைதியான குளத்தின் முகத்தை முகந்து வரும் தென்றலின் இன்னோசையையும், நடுப்பகலில் பெய்யும் மழையால் எழும்மண்வாசனையையும், தேவதாருமரத்திலிருந்து பறக்கும் இலைகளின் மணத்தையும் நுகர்வதை விரும்புபவர்கள்,நாங்கள் காற்றை மதித்துப் போற்றுபவர்கள். விலங்குகள், மரங்கள், மனிதர்கள் உள்ளிட்ட யாவற்றுக்கும் சுவாசித்தல் பொதுவானது.நீங்கள் சுவாசிக்கும் காற்று பற்றிச் சிந்தித்ததில்லை. காற்று அனைத்து உயிர்களை யும் காக்கிறது.நாங்கள் நிலத்தை விற்றுவிட நேர்ந்த பின்னரும் காற்றின் இன்றிமையாமையை நீங்கள்மறத்தல் கூடாது,

வானம்

வானத்தை விலை கொடுத்து வாங்க இயலாது எனச் சியாட்டல் கூறுகிறார்.

பகுதி-ஈ

IV.செயல்பாடு:

மாணவர்கள் தாங்கள் சிந்தித்து எழுதவும்.

எடுத்துக்காட்டு :

காடு வளர்ப்போம். இயற்கையைப் பேணுவோம்.


No comments:

Post a Comment