சாகச சுற்றுலாத்துறையில் வேலைவாய்ப்புகள் - EDUNTZ

Latest

Search here!

Sunday, 1 August 2021

சாகச சுற்றுலாத்துறையில் வேலைவாய்ப்புகள்

சாகசச்சுற்றுலா என்பது பயண மற்றும் பல்வேறு சுற்றுலாத் துறைகளில் ஒன்றாகும். இந்தியா போன்ற ஒரு நாட்டில் சுற்றுலாத்துறை என்பது வருவாய் ஈட்டித் தருவதில் முக்கியப் பங்கு வகிப்பதைப் போலவே சாகசச் சுற்றுலாவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே இருக்கிறது. 

சாகசச் சுற்றுலா என்பது பயணியர் தங்களது ஓய்வு நேரத்தை அசாதாரண, கவர்ச்சியான, வனாந்திரத்தில் எதிர்பாராத எதிர்பார்ப்புகள் நிறைந்த விதத்தில் கழிப்பது போல் இருக்க வேண்டும். மேலும் வனவிலங்கு சுற்றுலா, மலையேற்றம், ட்ரெக்கிங், பாராக்ளைடிங், பைகிங், ஸ்கூபா டைவிங், கயாக் ஃபிஷிங், ராஃப்டிங், பாரா செயிலிங், பன்ஜி ஜம்பிங் இவை அனைத்தையும் உள்ளடக்கியதே சாகசச் சுற்றுலாவாகும். 

இந்தியா மலைகள், பாறைகள், காடுகள், கடற்கரைகள் மற்றும் பாலைவனங்களைக் கொண்டிருப்பதால் இந்தியப் பயணிகளை மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் இருந்தும் பயணிகளைக் கவர்ந்திருப்பதால் சாகசச் சுற்றுலாத்துறை வேலைவாய்ப்புகள் என்பது சவால்கள் நிறைந்த ஒன்றாகவே உள்ளது. சாகசச் சுற்றுலாத் துறையில் பணியாற்ற சுற்றுலா, வெளிப்புற விளையாட்டு அல்லது மேலாண்மை ஆகியவற்றில் ஏதாவது ஒரு வகையான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்துகின்றது. 

சாகச விளையாட்டுகளைப் பயின்றவர்களால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட சாகச விளையாட்டைப் பயிற்றுவிப்பவராகவோ அல்லது சுற்றுலா இயக்குனராகவோ ஆக முடியும். இத்துறையில் சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டும் போதாது உண்மையிலேயே இச்சாகச விளையாட்டுகளில் விருப்பமும், ஆர்வமும் இருக்கும் ஒருவரால் மட்டுமே சாகசச் சுற்றுலாவில் விருப்பம் கொண்டு வருபவர்களை தைரியமாகவும், பத்திரமாகவும், சமயோகிதமாகவும் வழி நடத்த முடியும். 

சுற்றுலா அமைச்சகமானது பாதுகாப்பு மற்றும் தர மேம்பாட்டுக்கான நெறிமுறைகளை அமைத்துள்ளது. சாகசச் சுற்றுலா இயக்குனர் (ATO) என்பவர் சுற்றுலா அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டவராக இருக்க வேண்டும். இன்றைய இளைய சமுதாயத்தினர் புதிய இடங்களுக்குச் சென்று பொழுதுபோக்குகளை முயற்சி செய்யும் துணிச்சலானவர்களாக இருப்பதால், தகுதி வாய்ந்த சாகசப் பயிற்றுவிப்பாளர்களுக்கு அதிக தேவை உள்ளது. சுற்றுலா டூர் ஆப்பரேட்டர், வெளிப்புறக் கல்வி அலுவலர், சஃபாரி கைடு, சாகச விளையாட்டுப் பயிற்சியாளர், சுற்றுலா மற்றும் தகவல் ஆலோசகர், டிரைவர், சாதனை விளையாட்டுப் புகைப்படக்காரர், வனவிலங்கு, புகைப்படக் கலைஞர், இன்னும் பல வேலை வாய்ப்புகள் சாகசச் சுற்றுலாவில் உள்ளன. 

 சாகசச் சுற்றுலாத் துறையில் சம்பளம் என்பது இடம், தொழில் வாய்ப்பு, பொறுப்புகள், நிலைப்பாடு மற்றும் பருவ கால அல்லது முழுநேரம் என்பதைப் பொறுத்து மாறுபடும். ரிஷிகேஷ், டெல்லி, லோனாவாலா, பெங்களூரு போன்ற இடங்கள் பஞ்ஜி ஜம்பிங் சாகச விளையாட்டிற்குப் பெயர் பெற்ற இடங்களாகும். கோவா, மஹாராஷ்டிரா, ஹிமாச்சல் பிரதேசம், கேரளா, உத்தரகண்ட், கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற இடங்கள் பாரா செய்லிங் விளையாட்டிற்கு பிரசித்தி பெற்ற இடங்கள். பணாலி, நைனிடால், பன்சாகினி, ஏலகிரி, முசோரி, நந்தி ஹில்ஸ், காம்சேத்.... இவை பாராகிளைடிங் சாகச விளையாட்டிற்குப் புகழ் பெற்றதாகும். எனவே சாகசச் சுற்றுலாத் துறையில் பிறரிடம் வேலை செய்வதோடு நாமே சொந்தமாகச் செய்தால் கண்ணியமான வருமானத்தைத் திருப்தியாக ஈட்ட முடியும்.

No comments:

Post a Comment