முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் | ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி | கடலூர் மாவட்டம் - EDUNTZ

Latest

Search here!

Tuesday 10 August 2021

முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் | ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி | கடலூர் மாவட்டம்

முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் முன்னிலை..திருமதி.கா.ரோஸ் நிர்மலா, பி.எஸ்ஸி, எம்.ஏ., எம்.எட்,       ந.க.எண்.07/ஒபக/2021-2022 நாள்.09.08.2021 : 

பொருள் : 

பள்ளிக் கல்வி , கடலூர் மாவட்டம் - தொடக்க, நடுநிலை , உயர்நிலை, மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அடிப்படை கணினி பயன்படுத்துதல், EMIS, High Tech Lab மற்றும் ICT ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சி அளித்தல் - முதல் கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுமேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் - ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்துகொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்ய தலைமையாசிரியர்கள் தெரிவித்தல் - சார்பு. 

பார்வை 

சென்னை பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறை கடிதம் ந.க.எண். 22432/M2/இ1/2021, நாள். 22.07.2021  

மேற்காண் பார்வையில் உள்ள பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகளின் படி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அடிப்படை கணினி பயன்படுத்துதல், EMIS, High Tech Lab மற்றும் ICT ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக முதல் கட்ட பயிற்சி 12.08.2021 முதல் 18.08.2021 வரை (1சனி, ஞாயிறு நீங்கலாக )மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளை சார்ந்த முதுகலை ஆசிரியர்களுக்கு அவரவர்கள் பணிபுரியும் பள்ளியிலேயே Online முறையில் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சியானது முதல் கட்டமாக மாவட்டத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 43 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் Hi-Tech-Lab-ல் நடத்தப்பட வேண்டும். அந்தந்த பள்ளிகளில் உள்ள Hi-Tech-Lab-ஐ பயிற்சி நடத்த ஏதுவாக தயார் நிலையில் வைத்துக் கொள்ள சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 


மேலும் இப்பயிற்சியை இக்கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தின் படி 4 மையங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் 11 மேல்நிலைப் பள்ளிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு சேர்க்கப்பட்டுள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்குரிய பயிற்சி Link ஐ அந்த மையத்திற்குரிய கருத்தாளர்களை தொடர்பு கொண்டு பெற்று High Tech Lab பொறுப்பாசிரியர் உதவியுடன் நடத்த வேண்டும். 

இணைப்பில் உள்ள மையங்களின் கீழ் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த அனைத்து முதுகலை ஆசிரியர்களும் காலை 9.30 முதல் மாலை 5.00 மணிவரை பள்ளியில் உள்ள Hi-Tech-Lab-ல் மட்டுமே அமர்ந்து பயிற்சியை எடுத்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் பயிற்சி நடைபெறும் போது கருத்தாளர்களை கொண்டு வருகை பதிவு மேற்கொள்ள வேண்டும். 

தற்போது இப்பயிற்சியை நடத்த தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளைச் சார்ந்த தலைமையாசிரியர்கள் இத்துடன் இணைக்கப்பட்ட படிவத்தில் தங்கள் பள்ளியில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் சார்ந்த விபரங்களை நாளை 10.08.2021 காலை 11.00 மணிக்குள் Google Sheet-ல் பூர்த்தி செய்து அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது. Google Sheet Link தங்கள் பள்ளி மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். தங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்ட Google Sheet Link - ஐ Open செய்து அந்தந்த பள்ளி முதுகலை ஆசிரியர்களின் விபரங்களை உடன் பூர்த்தி செய்ய சம்மந்தபட்ட தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 

இப்பயிற்சிக்கான வருகை பதிவேடு பள்ளிகளில் இருந்து பெற்று மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு ஒவ்வொரு நாளும் தெரிவிக்கப்பட வேண்டும். இப்பயிற்சியை நடத்தும் கருத்தாளர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சம்மந்தப்பட்ட மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் Hi Tech பெறுப்பாசிரியர்கள் செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

முதல்கட்ட பயிற்சியை தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 12.08.2021 முதல் 18.08.2021 வரை பட்டியலில் உள்ள தங்கள் பள்ளிக்குரிய மைய கருத்தாளர்களை தொடர்பு கொண்டு Link -ஐ பெற்று Online முறையில் சிறப்பாக நடத்தி தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 


                                                                          (ஓம்) கா.ரோஸ் நிர்மலா 
                                                       முதன்மைக் கல்வி அலுவலர், மற்றும்                                                                                 மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர், 
                                           ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, கடலூர் மாவட்டம். 


பெறுதல்: 

அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள். நகல்: 1. மாவட்டக் கல்வி அலுவலர்கள், கடலூர் / வடலூர்/ சிதம்பரம் / விருத்தாசலம்

 2. இவ்வலுவலகக் கோப்பிற்கு













No comments:

Post a Comment