செவிலியர், டிப்ளமோ என்ஜினீயர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்யப்பட உள்ளதாக தமிழகஅரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு டிப்ளமோ மற்றும் பட்டதாரி ஆண், பெண் செவிலியர்கள் 300 முதல் 500 பேர் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கு மாத சம்பளம் ரூ.2 லட்சம் முதல் ரூ.2½ லட்சம் வரை கிடைக்கும்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 30 வயது முதல் 43 வயதுக்கு உட்பட்ட டிரைவர்கள் குவைத் நாட்டில் பணியாற்ற தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.27 ஆயிரம் முதல் ரூ.34 ஆயிரத்து 500 வரை வழங்கப்படும்.
டிப்ளமோ என்ஜினீயர்
அரபு நாட்டின் உணவுவகைகள் சமைக்க தெரிந்த ஆண் சமையல்காரர்களும், வீட்டு வேலைக்கு 30 வயது முதல் 40 வயது வரை உள்ள பெண் பணியாளர்களும் விண்ணப்பிக்கலாம். சமையல்காரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.37 ஆயிரமும், வீட்டு வேலை பணியாளர்களுக்கு ரூ.29 ஆயிரத்து 640 முதல் ரூ.32 ஆயிரம் வரையும் வழங்கப்படும்.
டிப்ளமோ என்ஜினீயர் (மெக்கானிக்கல்), ஐ.டி.ஐ. பிட்டர் தேர்ச்சி பெற்ற 22 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் ஓமன் நாட்டில் பணிபுரிய தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.29 ஆயிரம் வழங்கப்படும்.
மேற்படி சம்பளத்தைத் தவிர்த்து, உணவு, இருப்பிடம், விமான டிக்கெட் ஆகியவை அந்தந்த நாட்டின் வேலை அளிப்பவரால் தனியாக வழங்கப்படும்.
பதிவு செய்யலாம்
மேற்கண்ட பணிகளுக்கு தகுதி உள்ளவர்கள் www.omcmanpower.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வெளிநாட்டு வேலைகளுக்கான காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
வெளிநாட்டில் வேலைபார்க்க விரும்புபவர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்து பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment