யூஜிசியின் பல்கலை பட்டியலில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 3 August 2021

யூஜிசியின் பல்கலை பட்டியலில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: 12பி அந்தஸ்த்தினை பெறுவதற்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் கடந்த 2020ம் ஆண்டு உரிய விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. 

கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பல்கலைக்கழகத்திற்கு ஆய்வுக்குழு அனுப்பப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்குழுவின் அறிக்கைக்கு யூஜிசியின் 551 வது நிலைக்குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு 12பி அந்தஸ்தினை வழங்கி யூஜிசியின் 12 பி அந்தஸ்து வழங்கப்பட்ட மாநில பல்கலைக்கழகங்களின் பட்டியலில் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தினை சேர்த்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment