ஆசிரியர் பயிற்சிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 17 August 2021

ஆசிரியர் பயிற்சிக்கு ஆன்லைனில் விண்ணப்பம்



அரசினர் ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் ‘ஆன்லைன்’ வழியாக வரும் 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ராணிப்பேட்டையில் உள்ள ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அன்பழகன் தெரிவித்துள்ளார். 

 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசினர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 2021-22 -ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. பிளஸ் 2 தேர்ச்சியுடன் பொதுப்பிரிவினர் 30 வயதுக்கு மிகாமல், பிற பிரிவினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆசிரியர் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் https://scert.tn.schools.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் 27-ம் தேதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment