அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மையம், திறமை வாய்ந்த இளைய தலைமுறையினரை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து பட்டியலிடுவது வழக்கம். 


இந்த பல்கலைக்கழகத்தின் 2020-21-ம் ஆண்டுக்கான திறமையான மாணவ, மாணவியர் தேடலில் உலகம் முழுவதும் 84 நாடுகளில் இருந்து 19 ஆயிரம் மாணவ, மாணவியர் இடம் பெற்றனர். இதில் மாணவ, மாணவிகளின் திறமை மதிப்பிடப்படும். மாணவர்களுக்கு தேர்வு நடத்தி அவர்களில் உலகெங்கும் உள்ள திறமையான மாணவர்களை அடையாளம் கண்டு பட்டியலிடுவார்கள். 


இதில் மாணவர்களின் உண்மையான கல்வித்திறன் தெரிய வரும். அவர்கள் உலகின் தலைசிறந்த மாணவர்கள் என்ற அங்கீகாரம் பெறுவர். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மையத்தின் இந்த திறமை தேடலில், 11 வயதே ஆன இந்திய வம்சாவளி மாணவி நடாஷா பெரியும் இடம் பெற்றார். இவர் நியூ ஜெர்சியில் உள்ள தெல்மா எல். சாண்ட்மியர் தொடக்கப்பள்ளி மாணவி ஆவார். இவர் மாணவ, மாணவிகளின் திறமையைக் கண்டறிய நடத்தப்படுகிற 2 தேர்வுகளில் தனிச்சிறப்பான இடத்தைப் பெற்று அசத்தி உள்ளார். 


5-வது கிரேடு மாணவியான இவர், வாய் மொழி மற்றும் மற்றொரு பிரிவில், 8-வது கிரேடு மாணவர்களின் செயல்திறனில் 90 சதவீதத்தைக் கொண்டுள்ளது தெரிய வந்தது. இதனால் அவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் உயர் மரியாதை விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகின் தலைசிறந்த மாணவர்கள் பட்டியலில் இடம் பிடித்து சாதித்துள்ளார். இதுபற்றி மாணவி நடாஷா பெரி கூறுகையில், “இந்த சாதனை மூலம் நான் இன்னும் அதிகமாக சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் எனக்குள் ஏற்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.

Post a Comment

Previous Post Next Post

Search here!