விண்கற்கள் கண்டறிந்த கோவை ஆசிரியர்கள்! சான்றிதழ் வழங்கியது 'நாசா' - EDUNTZ

Latest

Search here!

Wednesday 11 August 2021

விண்கற்கள் கண்டறிந்த கோவை ஆசிரியர்கள்! சான்றிதழ் வழங்கியது 'நாசா'



சர்வதேச விண்கற்கள் கண்டறிதல் திட்டத்தில், கோவையை சேர்ந்த மூன்று ஆசிரியர்கள் பங்கேற்று, 18 விண்கற்களை கண்டறிந்துள்ளனர். சர்வதேச விண்வெளி ஆய்வு அமைப்பு (ஐ.ஏ.எஸ்.சி), புதிய விண்கற்களை கண்டறியும் ஆய்வில், ஈடுபட்டு வருகிறது. 

அமெரிக்க நாட்டின், விண்வெளி ஆய்வு அமைப்பான, நாசா உதவியோடு, 'சிட்டிசன் சயின்டிஸ்ட் ரிசர்ச்' என்ற திட்டத்தின் கீழ், பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள், இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஹவாயில் உள்ள, 'பான்-ஸ்டார் 1' என்ற தொலைநோக்கி, ஆண்டு முழுவதும், இரவில் வான்வெளியை படம் எடுத்து வருகிறது. இப்படங்களை பிரத்யேக மென்பொருள் உதவியோடு, விண்கற்களா என கண்டறிய வேண்டும். பெங்களூருவில் உள்ள, 'சிகுரு கோ' ஆய்வகம் மூலம், விண்கற்களை கண்டறிய, இணையவழி பயிற்சி, ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டது.

கோவையில் இருந்து, மூன்று ஆசிரியர்கள் உட்பட, தமிழகத்தில் இருந்து, 23 ஆசிரியர்கள் பங்கேற்றனர். இவர்கள், 18 விண்கற்களை அடையாளம் கண்டறிந்துள்ளனர். இதை நாசா விஞ்ஞானிகளும், உறுதி செய்துள்ளனர். இறுதி கட்ட ஆய்வுக்கு பின், விண்கற்களுக்கு, பெயரிடும் வாய்ப்பு இவர்களுக்கு அளிக்கப்படவுள்ளது.

இதன்படி, எஸ்.எஸ்.குளம் ஒன்றியம், சின்னமேட்டுப்பாளையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் ஜெயந்தி, சூலுார் ஒன்றியம், எம்.கணபதிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஸ்ரீகாந்த் மற்றும் தொண்டாமுத்துார் ஒன்றியம், ஆறுமுககவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சத்தியபிரபாதேவி ஆகியோரை பாராட்டி, நாசா சான்றிதழ் வழங்கியுள்ளது. இவர்களுக்கு, கோவை முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், வாழ்த்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Comments System

[blogger][disqus][facebook]