கணவர் குழந்தைகள் சாப்பிடுவதை கண்காணிக்கும் பெண்கள், தங்களுடைய உணவில்… குறிப்பாக, காலை உணவில் ஏன் அத்தனை கவனமாக இருப்பதில்லை? ஆனால் காலை உணவு மிக முக்கியம் என்கிறது, மருத்துவம். பல இல்லத்தரசிகள் காலை உணவில் அலட்சியமாகத்தான் இருக்கிறார்கள். அறிவியல் ரீதியாக எடுத்துக்கொண்டால் காலை உணவில் ைவட்டமின், மினரல்ஸ், கார்ப்போ ஹைட்ரேட்ஸ் கிடைக்கும்.
எழுந்ததில் இருந்து 2 மணி நேரத்துக்குள்ளாக சாப்பிட்டுவிட வேண்டும்.
காய்கறிகளை பொரியலாகவோ, குழம்புடனோ சாப்பிடலாம். குறிப்பாக, காய்கறிகளை நறுக்கி இட்லி, தோசை மாவுகளில் கலந்து, வேகவைத்து சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகளின் உடலில் உள்ள அதிகபட்ச நீர்ச்சத்தினை குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஓட்சை எல்லோரும் அடிக்கடி எடுத்துக்கொள்வது தவறு.
அதற்குப்பதில் நெல்லி ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம். இயற்கையாக கிடைக்கும் பழச்சாறு, உளுந்து, முளைகட்டி வேகவைத்த தானியங்களை சாப்பிடலாம்.
`நேரமாச்சு’ என அரைகுறையாக சில நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவர்கள் அதிகம். அப்படி செய்வதால் செரிமானக்கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. சராசரியாக ஒவ்வொரு வேளையும் குறைந்தபட்சம் 10-20 நிமிடங்கள் வரை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். தினமும் ஒரு பழம், காய்கறி, கீரை உணவில் இருந்தால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.
No comments:
Post a Comment