நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 4 August 2021

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு



நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை ஆக.10ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒருங்கிணைந்த நுழைவு தேர்வாக ‘நீட்’ உள்ளது. இந்திய மருத்துவ குழுமம் சட்டம் - 1956 மற்றும் பல் மருத்துவர் சட்டம் 1948-ல், கடந்த 2018-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு, இந்த நுழைவுத்தேர்வு கொண்டு வரப்பட்டது. அகில இந்திய மருத்துவ குழும இடைநிலை கல்வி வாரியத்தால் இத்தேர்வு நடத்தப்பட்டது. 2019-ம் ஆண்டு முதல் இந்த நுழைவுத் தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. 

மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை 13-ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 6-ம் தேதி வரை நீட்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ntaneet.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 10ஆம் தேதிவரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்டு 10 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். 

 விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 10 இரவு 11.50 மணி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment