சுதந்திர தினவிழாவை பள்ளிகளில் எப்படி கொண்டாட வேண்டும்? கல்வித்துறை அறிவுரை - EDUNTZ

Latest

Search here!

السبت، 7 أغسطس 2021

சுதந்திர தினவிழாவை பள்ளிகளில் எப்படி கொண்டாட வேண்டும்? கல்வித்துறை அறிவுரை

நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவினை அனைத்து பள்ளி களிலும் சில வழிமுறைகளை பின்பற்றி கொண்டாட அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றன. 

அதன்படி, பள்ளிகளில் தேசிய கொடியினை ஏற்றி விழாவினை எளிமையாக கொண்டாட வேண்டும். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் முன்களப்பணியாளர்களாக செயல்படும் டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களின் சேவையினை பாராட்டும் பொருட்டு அவர்களை அழைத்து சிறப்பிக்க வேண்டும். 

கொரோனா தொற்று ஏற்பட்டு பூரண குணம் அடைந்தவர்களையும் விழாவுக்கு அழைக்கலாம். விழா நடைபெறும் பகுதிகளில் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். 

பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்தக் கூடாது. பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் சுதந்திர தினவிழா நாளான 15-ந்தேதி அனைத்து பள்ளிகளிலும் கொரோனா பெருந்தொற்று குறித்து அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகளை பின்பற்றி சுதந்திர தினவிழாவினை கொண்டாட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவல் கல்வித்துறை சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது SOURCE NEWS

ليست هناك تعليقات:

إرسال تعليق