குழந்தைகளுக்கான "இன்டர்நெட்" பாதுகாப்பு எட்டு மொழிகளில் அறிமுகம் செய்கிறது கூகுள் - EDUNTZ

Latest

Search here!

Thursday, 26 August 2021

குழந்தைகளுக்கான "இன்டர்நெட்" பாதுகாப்பு எட்டு மொழிகளில் அறிமுகம் செய்கிறது கூகுள்

குழந்தைகளுக்கான "இன்டர்நெட்" பாதுகாப்பு எட்டு மொழிகளில் அறிமுகம் செய்கிறது கூகுள்

குழந்தைகள் பாதுகாப்பான முறையில் இன்டர்நெட் வசதியை பயன்படுத்துவது தொடர்பான வசதியை தமிழ் உட்பட எட்டு மொழிகளில் வழங்க இணையதளத்தில் இயந்திரமான கூகுள் திட்டமிட்டு உள்ளது இன்டர்நெட் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் தங்களுக்கு தேவையான தகவல்களை கூகுள் இணையதளத்தில் தேடுகின்றனர் இணையத்தில் சரியான தகவல்களை கிடைப்பதுடன் பொய்யான போலியான தகவல்களை அதிகளவில் இடம்பெறுகின்றன மேலும் பயன்படுத்துவோரின் தகவல்கள் திருடப்படுகின்றன இதுபோன்ற மோசடிகள் குறித்து அறிந்துள்ள கூகுள் இணையதளத்தில் பாதுகாப்பு மையம் ஒன்றை அமைத்துள்ளது  

இதில் பாதுகாப்பான முறையில் இன்டர்நெட்டை பயன்படுத்துவது தொடர்பாக தகவல்கள் இடம்பெற்றுள்ளன இந்நிலையில் சிறுவர் சிறுமியர் பாதுகாப்பான முறையில் இன்டர்நெட் பயன்படுத்துவதற்கான புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது இத்திட்டம் இந்தியாவிலும் இந்த ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளது தமிழ் இந்தி தெலுங்கு மராத்தி மலையாளம் கன்னடம் பெங்காலி குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளில் பாதுகாப்பு வழிமுறைகள் வழங்கப்பட உள்ளன இத்திட்டம் விளையாட்டுடன் கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது அத்துடன் பிரபலமான அமர் சித்ர கதா என்ற காமிக்ஸ் இதழுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது அந்த இதழ்களில் இன்டர்நெட் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் இடம்பெற உள்ளன


No comments:

Post a Comment