ஆஸ்துமா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் எளிய வழிகள் - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 22 August 2021

ஆஸ்துமா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் எளிய வழிகள்


மூச்சுக் காற்றை நுரையீரலுக்கு எடுத்துச்செல்லும். சில நேரங்களில் உணவு, உடை, தூசு, புகை, புகைப்பிடித்தல், தொழிற்சாலை கழிவுகள் போன்றவை ஏற்படுத்தும் ஒவ்வாமையாலும் ஆஸ்துமா ஏற்படலாம். 

நுரையீரலில் நோய்த்தொற்று இருந்தாலும், அடிக்கடி சளி பிடிப்பது, அடுக்குத் தும்மல், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, வறட்டு இருமல் போன்றவற்றுக்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டாலும் ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. 

டான்சில் வீக்கம், அடினாய்டு வீக்கம், சைனஸ் மற்றும் பிரைமரி காம்ப்ளக்ஸ் போன்றவற்றாலும் ஆஸ்துமா பாதிப்பு உருவாகலாம். மேலும், கவலை, பதற்றம், மன அழுத்தம், கோபம், பயம், அதிர்ச்சி, பரபரப்பு, மனக்குழப்பம், அதிகமாக உணர்ச்சி வசப்படுதல் போன்ற மன நலம் சார்ந்த பிரச்சினைகளாலும் ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வீட்டில் உள்ள பூச்சிகளின் கழிவு, மூட்டைப்பூச்சி, கரப்பான்பூச்சி, பூக்களின் மகரந்தம் மற்றும் செல்லப்பிராணியின் முடி அல்லது உடல் செல் ஆகியவை சுவாசம் வழியாக நுரையீரலுக்கு செல்லும் போது நோய் தூண்டப்படும். 

சோப்பு, பாத்திரம் சுத்தம் செய்யும் திரவம், துணி துவைக்க பயன் படுத்தப்படும் சோப்பு, துணியை மென்மையாக்கும் பொருள், பேப்பர் துண்டுகள், கழிவறை பேப்பர், ஷாம்பு, தலைமுடி ஜெல், அழகுப்பொருட்கள், ஃபேஸ் லோஷன்கள், சன் ஸ்கிரீன் லோஷன், ஷேவிங்குக்குப் பின் உபயோகிக்கும் திரவம், ரூம் ஸ்பிரேயர் மற்றும் எண்ணெய் அடிப் படையான பெயிண்ட் போன்றவற்றால் ஏற்படும் ஒவ்வாமையாலும் ஆஸ்துமா வர வாய்ப்பு உள்ளது. 
பாட்டி வைத்திய முறையில் ஆஸ்துமா பாதிப்புகளை கட்டுப்படுத்த சில வழிகள்: தலா 100 கிராம் கண்டங்கத்திரி பொடி மற்றும் சுருள்பட்டை பொடி, 50 கிராம் திப்பிலி பொடி, 10 கிராம் பெருங்காயம் ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கி, தினமும் காலை, மாலை என இரு வேளையும் அரை ஸ்பூன் அளவு ஒரு டம்ளர் வெந்நீர் அல்லது பாலில் கலந்து குடிக்கலாம். நாள்பட்ட ஆஸ்துமா, தலைவலி, சளி, தும்மல் போன்றவை மட்டுப்படும். குப்பைமேனி, குன்றிமணி, முருங்கை, கற்பூரவள்ளி ஆகியவற்றின் இலைகள், கோவைக்கொடி, வெங்காயம், இஞ்சி அல்லது சுக்கு, கொன்றை மரப்பட்டை, தூதுவளை பொடி, தும்பைப்பூ சாறு, மாதுளம் பழம் மற்றும் எலுமிச்சைச் சாறு, தான்றிக்காய் தோல், இலுப்பைப்பூ, மணத்தக்காளி கீரை ஆகியவற்றை தனித்தனியாக உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். 
அல்லது அவற்றை கசாயமாக தயாரித்து அதில் கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம். அவற்றை பொடியாக தயாரித்து தேனில் கலந்தும் பருகலாம். திப்பிலி, சுக்கு, மிளகு இவற்றுடன் சிறு குறிஞ்சான் வேர் பொடியை கலந்து அரை கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட்டு வர ஆஸ்துமா மட்டுப்படும். காச நோயாளிகள் வேப்ப மரத்தில் அமைக்கப் பட்ட பரண் மீது தினமும் பகல் வேளைகளில் மட்டும் அமர்ந்து உணவும், மருந்தும் சாப்பிட்டு வர 48 நாட்களில் ஆஸ்துமா பாதிப்பு படிப்படியாக குறையும்.


No comments:

Post a Comment