தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை - EDUNTZ

Latest

Search here!

Saturday 21 August 2021

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழ கத்தில் பல்வேறு படிப்புகளில் 2021-22ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெ றுவதாக அறிவிக்கப்பட்டுள் ளது. இது குறித்து வெளியி டப்பட்ட அறிக்கை: தமிழ்நாடு திறந்ததி லைப் பல்கலைக்கழகம் 2021-22ம் கல்வி ஆண்டுக் கான மாணவர் சேர்க் கையை நேற்று முதல் தொடங்கியுள்ளது. 


அதன்படி இக்கல்வியாண்டில், 29 இள நிலை, 19 முதுநிலை மற்றும் 10 பட்டயம், தொழிற்பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் என மொத்தம் 58 படிப்புகள் தொலைதூரக்கல்வி முறையில் வழங்கப்படுகிறது. தமிழ் நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் கற்போர் உதவி மையங்கள் 132 அரசு கலை மற்றும் அறிவியல் கல் லூரிகளில் அமைக்கப்பட்டுள்ளதால் அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்ககாத மாண வர்கள் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக படிப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம். 

அவர் களுக்கு தேவையான கற்றல் உதவிகள் அனைத்தும் அந் தந்த கல்லூரிகளிலேயே வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறைவாசிகளுக்கு கல்வி கட்டணத்தி லிருந்து விலக்கு அளிக்கப்படு கிறது. விருப்பமுள்ளவர் கள் இணைய வழியாக 
https://mouadmisions.in/onlisapp/ அல் லது சென்னை, கோவை, தர்ம புரி, மதுரை, நீலகிரி, திருச்சி, திருநெல்வேலி மற்றும் விழுப்பு ரம் ஆகிய மண்டலமையங்கள் அல்லது 132 அரசு கலை மற் றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான விண்ணப்பங் களை சமர்ப்பிக்கலாம். 

No comments:

Post a Comment