கோவை சிவானந்தாகாலனியை சேர்ந்தவர் பரத்குமார் (வயது 19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. எலெக்ட் ரானிக்ஸ் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் இன்டர்நெட் வேகத் தை சீராக வைத்திருக்க உதவும் சிக்னல் பூஸ்டர் கருவியை தயாரித்து உள்ளார்.இது குறித்து மாணவர் பரத்குமார் கூறியதாவது:-
குறைந்த விலையில் சிறந்த தரத்துடன் மக்களுக்கு பயன்படும் வகை யில் பல்வேறு பொருட்களை தயாரிக்க திட்டமிட்டேன். அதன்படி சிறிய தானியங்கி கிருமி நாசினி கருவி, பழைய இரும்பு பொருட்களில் இருந்து உருவாக்கப்பட்ட சைக்கிள், உணவு பொருட்களில் ரசாயன அளவை கணக்கிடும் கருவியை உருவாக்கி உள்ளேன். இதற்கு மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர (எம்.எஸ்.எம்.இ.) நிறுவனம் அங்கீகாரம் வழங்கி உள்ளது.
எனது 4-வது படைப்பாக சிக்னல் பூஸ்டர் என்ற மோடம் கருவியை உருவாக்கி உள்ளேன். இதை ஒரே நேரத்தில் 3 பேர் பயன்படுத்தினா லும் இன்டர்நெட்டின் வேகம் குறையாமல் சீராக வைத்திருக்கும். மின்சாரம் மற்றும் பேட்டரி மூலமும் இயங்கும் வகையில் இந்த கருவியை தயாரித்து உள்ளேன். எனக்கு பெற்றோர், கல்லூரி பேராசிரியர்கள், சக மாணவர்கள் உறுதுணையாக இருந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment