உற்பத்தி அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பும், வேலை வாய்ப்பும் - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 1 August 2021

உற்பத்தி அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பும், வேலை வாய்ப்பும்

உற்பத்தி அறிவியல் மற்றும் பொறியியல் என்பது மேனுஃபேக்சரிங் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் என்று அழைக்கப்படுகிறது. இத்துறையின் பாடநெறி ஆராய்ச்சியானது மேம்பாட்டு செயல்முறைகள், இயந்திரங்கள், கருவிகள் மற்றும் உபகரணங்களில் கவனம் செலுத்துகிறது. உற்பத்திப் பொறியியல் என்பது இயந்திரப் பொறியியல், தொழில்துறைப் பொறியியல், மின் பொறியியல், மின்னனுப் பொறியியல், கணினி அறிவியல், பொருட்கள் மேலான்மை மற்றும் செயல்பாட்டு மேலாண்மை ஆகிய அனைத்தும் இணைந்த பொறியியல் துறை என்றால் அது மிகையாகாது. இப் பொறியியல் படிப்பானது புரடக்‌ஷன் இன்ஜினியரிங் என்றும் அழைக்கப்படுகின்றது. 

கல்வித்தகுதி:- 

 * பி.இ. உற்பத்திப் பொறியியல்/பி.டெக் உற்பத்திப் பொறியியல்:- 10+2வில் இயற்பியல், வேதியியல், மற்றும் கணிதப் பாடங்களைப் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதே போல், தேசிய, மாநில மற்றும் தனியார் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் நடத்தும் நுழைவுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது நான்கு ஆண்டு கால இளங்கலை பட்டப் படிப்பாகும். எம்.இ.முதுகலைப் பொறியியல்:- இப்படிப்பில் இணைய பொது நுழைவுத் தேர்வுகள் நடத்தப் படுகின்றன. அத்துடன் இளங்கலை பட்டப்படிப்பில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கையானது நடை பெறுகின்றது. பெரும்பாலான கல்லூரிகளில் இந்த பொது நுழைவுத் தேர்வுகளின் மதிப் பெண்களைக் கொண்டும் சில தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் அவர் களை நடத்தும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றது. 

 எம்ஃபில்/பிஹெச்.டி:- எம்.இ. பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விருப்பமிருந்தால் இது போன்ற முனைவர் பட்டப் படிப்பையும் படிக்கலாம். 

 பாடநெறிகள்:

பொறியியல் வேதியியல், சுற்றுச்சூழல் அறிவியியல், ஆட்டோமேஷன் மற்றும் கட்டுப்பாட்டுப் பொறியியல், C++ல் தரவு அமைப்பு, செயல்பாட்டுப் ஆராய்ச்சி, உற்பத்தி வடிவமைப்பு மற்றும் மேம்பாடு, அடிப்படைப் பொறியியல் கணிதம், ஒருங்கிணைந்த கணினி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி இயற்பியல், அடிப்படை மின்னணுவியல், மின் மற்றும் மின்னணுப் பொறியியல், மின் மற்றும் மின்னணுப் பொறியியல், அப்ளைடு தெர்மோ டைனமிக்ஸ், டைனமிக்ஸ் ஆஃப் மெஷின்ஸ் லெபாரட்ரி, பொருள் அறிவியல் மற்றும் பொறியியல், திரவ மற்றும் வெப்பப் பொறியியல், மெட்டலர்ஜி, பொருளாதாரம், நிதி, கணக்கியல் மற்றும் செலவு போன்ற பாடங்களையும் அத்துடன் ஒவ்வொரு வருடமும் தேர்ந்தெடுத்துப் படிக்கும் பாடங்களையும் படிக்கிறார்கள். 

 தொழில் வாய்ப்புகள்:- 

உற்பத்திப் பொறியியல் என்பது எந்தவொரு தொழில்துறையின் முக்கிய கருவிகளில் ஒன்றாகும். தொடக்கநிலை முதல் இறுதித் தயாரிப்பு வரை ஒவ்வொரு கட்டத்திலும் இத்துறையின் பங்களிப்பு உள்ளது என்றே சொல்லலாம்.

No comments:

Post a Comment