லோகோ டிசைனிங் படிப்பும், வழிகாட்டுதலும்...! - EDUNTZ

Latest

Search here!

السبت، 7 أغسطس 2021

லோகோ டிசைனிங் படிப்பும், வழிகாட்டுதலும்...!

படைப்பாற்றலை பயன்படுத்தி உருவாக்கப்படும் லோகோ டிசைன்களுக்கு, உலகம் முழுக்க நல்ல வரவேற்பு இருக்கிறது. 
EDUNTZ


அதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கவனம், இப்போது ‘லோகோ டிசைனிங்’ துறை பக்கம் திரும்பி இருக்கிறது. நிறைய மாணவர்கள், டிசைனிங் துறையில், லோகோ டிசைனிங் கலை சம்பந்தமான படிப்புகளிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். புதுமையான படிப்பு என்பதால், மாணவர்களிடையே நிறைய சந்தேகங்களும் எழுகின்றன. அவை அனைத்திற்கும் தன்னுடைய லோகோ டிசைனிங் அனுபவம் வாயிலாக பதிலளிக்கிறார், அழகிரி கோவிந்தராஜூ. பட்டுக்கோட்டை நாட்டுச்சாலை கிராமத்தை சேர்ந்தவரான இவர், லோகோ டிசைனிங் துறையில் 19 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த விழாவில் சிறந்த லோகோ உருவாக்கத்திற்காக, சர்வதேச விருது வென்றவர். இவர் லோகோ டிசைனிங் துறை பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்.
லோகோ, என்றால் என்ன?
3 மணிநேர திரைப்பட கதையை விளக்க, ஒரு ‘ஒன்லைன்’ இருக்கும். அதுபோலவே, 100 ஆண்டு பாரம்பரிய மிக்க நிறுவனத்தின் வரலாற்றை சொல்ல, சேவைகளை வெளிக்காட்ட, ஒரு அடையாளம் தேவைப்படுகிறது. அதுவே, லோகோவாக அறியப்படுகிறது.
பிராண்டிங் மற்றும் லோகோ இவை இரண்டிற்குமான வித்தியாசம் என்ன?
ஒரு பொருள் மீதான ஈர்ப்பை உருவாக்குவது பிராண்டிங். விளம்பரம் வாயிலாககூட, பிராண்டிங் கலையை நிகழ்த்தலாம். ஆனால் லோகோ என்பது வேறு ரகம். ஒரு நிறுவனத்தை ஒரு முத்திரையின் வாயிலாக அடையாளப்படுத்தி, மக்கள் மனதில் பதியவைக்கவேண்டும். சிந்திக்க வைக்கவேண்டும். அந்த நிறுவனத்தின் முழுக் கதையை சொல்வதாக அது இருக்கவேண்டும். லோகோ உருவாக்கத்தில் பயன்படுத்தப்பட்ட டிசைன், பேட்டன், வண்ணம்... என எல்லாமே, அந்த நிறுவனத்தின் எண்ணமாக இருக்கவேண்டும்.
லோகோ டிசைனிங் துறை சுலபமானதா?
மிகவும் சுலபமான கலை. மகிழ்ச்சியான வேலை சூழலை உருவாக்கி கொடுக்கும் துறை. புதுமையாக சிந்திக்க வைக்கும். உற்சாகமாக இயங்க வைக்கும்.
யாரெல்லாம், லோகோ டிசைனிங் துறையை தேர்ந்தெடுக்கலாம்?
கணித அறிவு நிரம்பப்பெற்ற படைப்பாற்றல் மற்றும் பொறுமை குணம் படைத்த எல்லோருக்கும், ஏற்ற துறை இது. கூடுதலாக ஓவியத்திறனும் அவசியம்.
கணித அறிவு அவசியமா?
ஆம், அவசியமான ஒன்றுதான். டிசைனிங் வேறு. லோகோ டிசைனிங் வேறு. இரண்டையும் ஒன்றாக குழப்பிக் கொள்ளக்கூடாது. டிசைனிங் அதாவது அழகுபடுத்தி வடிவமைக்க, எந்தவொரு கோட்பாடும், வரைமுறையும் பின்பற்றப்படுவதில்லை. ஆனால் ஒரு நிறுவனத்தின் லோகோ அடையாளத்தை உருவாக்க, நிறைய கோட்பாடுகளும், வரைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. இவற்றை பின்பற்றி உருவாக்கினால் மட்டுமே, அது சர்வதேச லோகோவாக அங்கீகரிக்கப்படும்.
லோகோ உருவாக்கத்தின் பின்னணி கோட்பாடுகளை விளக்குங்கள்?
‘கோல்டன் ரேஷியோ’ எனப்படும் ‘ஃபிபோ னாசி’... கோட்பாட்டின் அடிப்படையில்தான், லோகோக்கள் வடிவமைக்கப்படுகின்றன. இயற்கையின் படைப்பாற்றல், இந்த கோல்டன் ரேஷியோ கோட்பாடுகளின் வழியே நிகழ்கிறது. இதை புரிந்து கொள்ளவும், அதன் வழி நின்று லோகோக்களை உருவாக்கவும், கொஞ்சம் கணித அறிவு தேவை.
தமிழ்நாட்டிற்கு ஏற்ற தொழிலா இது?
ஆரம்பத்தில், கடும் போட்டி களை சந்திக்க நேரிடும். திறமைகளை வளர்த்துக்கொண்டு, நட்புவட்டத்தை உருவாக்கிக் கொண்ட பிறகே சம்பாதிக்க முடியும். லோகோ உருவாக்க பணியின்போதும், சம்பாத்தியத்தின்போதும், பொறுமை அவசியம். * ஒரு லோகோ உருவாக்க, எவ்வளவு காலம் தேவைப்படும்? 19 வருட அனுபவத்தில், ஒரு லோகோ உருவாக்கி, அதை முழுமைப்படுத்தி கொடுக்க, ஒன்று முதல் ஒன்றரை வருடங்கள் தேவைப்படுகிறது. லோகோவை உருவாக்கிவிடுவது சுலபம். அதை நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ப, தகவல்களோடு முழுமைப்படுத்தவே வெகு நாட்கள் ஆகும்.
லோகோ டிசைனிங் துறைக்கு என பிரத்யேக படிப்பு உண்டா?
மும்பை, ஜலந்தர், புனே, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா... என நிறைய பகுதிகளில், லோகோ டிசைனிங் படிப்பிற்கு என பிரத்யேக படிப்புகள் உண்டு. தமிழ்நாட்டின் சில இடங்களில், கிராபிக் டிசைனுடன், சேர்த்து கற்றுக்கொடுக்கிறார்கள்.
துறை வளர்ச்சி எப்படி இருக்கும்?
உலகளவில் நிறைய வரவேற்புகள் இருக்கிறது. தொடர்பற்ற கிராமத்தில் இருந்துகூட, சர்வதேச புகழ்பெற்ற நிறுவனத்திற்கு லோகோ டிசைன் செய்து கொடுக்கலாம். அதற்கான சன்மானத்தை கோடிகளில் பெறலாம். இதுபோக, லோகோ டிசைனிங் பணிகளை தவிர்த்து, டிசைனிங் அறிவை வளர்த்துக்கொண்டு, டிசைனிங் வேலைகளைகூட செய்து சம்பாதிக்கலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق