விண்வெளித் தொழில்நுட்பம் (ஸ்பேஸ் டெக்னாலஜி) படிப்புப் பற்றி அறிந்துகொள்வோம் - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 22 August 2021

விண்வெளித் தொழில்நுட்பம் (ஸ்பேஸ் டெக்னாலஜி) படிப்புப் பற்றி அறிந்துகொள்வோம்



பனிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு கட்டாயம் மருத்துவப் படிப்பு அல்லது பொறியியல் படிப்பில் குறிப்பிட்ட துறைகளில் தான் சேர வேண்டும் என்ற மக்களின் கருத்தானது இப்பொழுது மாறிவிட்டது என்றே சொல்லலாம். 
நவீன வாழ்க்கை முறை மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் நம் எதிர்கால வாழ்க்கையைத் தொடர எண்ணற்ற மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன என்றே சொல்லலாம். அவற்றில் ஒன்றுதான் விண்வெளி அறிவியல். சூரிய குடும்பத்தைப் பற்றிய புதிய கண்டுபிடிப்புகள், செயற்கோள்களைப் பற்றிப் படிப்பது மற்றும் பூமியுடன் செயற்கோள்களுக்கு இருக்கும் தொடர்பைப் பற்றி அறிந்து கொள்வது ஆகியவற்றில் விருப்பமுள்ளவர்களாக நீங்கள் இருந்தால் இந்த விண்வெளித் தொழில்நுட்பப் படிப்பானது உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். 
 விண்வெளி தொழில்நுட்பம் அல்லது விண்வெளி விஞ்ஞானம் என்பது ஒரு பரந்த பாடப் பிரிவு என்றே சொல்லலாம். இதில் வானியல் மற்றும் வானியற்பியல், பிரமாட்டரி வளி மண்டலங்கள் மற்றும் வானியல், பூமி அறிவியல் மற்றும் சூரிய மண்டல ஆய்வுகள் ஆகியவை அடங்கும். சமீபத்திய விண்வெளி அறிவியலானது அண்டவியல், நட்சத்திர அறிவியல், கிரக அறிவியல், வானியல், ஜோதிடம் என பல ஏராளமான துணைக் கிளைகளாக வகைப்படுத்தப் பட்டுள்ளதற்கு அத்துறையில் ஏற்ப்பட்டுள்ள எழுச்சியே காரணம் என்று சொல்லலாம். விண்வெளித் தொழில்நுட்பத்தைப் படித்து செழிப்பான வாழ்க்கையை மேற்கொள்வதன் மூலம் புதிய உயரங்களைத் தொடவும், உயர்ந்த வெற்றியை அடையவும், நாட்டிற்கு பெருமையைத் தேடித் தரவும் முடியும். 

 கல்வித்தகுதி:- 

பனிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப்பாடங்களைப் படித்து அதில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றவர்களால் விண்வெளி தொழில்நுட்ப இளங்கலைப் பட்டப் படிப்பில் இணைய முடியும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) மற்றும் பிற நிறுவனங்களால் வழங்கப்படும் விண்வெளி தொழில்நுட்பம் / விண்வெளி அறிவியல் தொடர்பான 4 ஆண்டு பி.டெக் திட்டம் அல்லது 3 ஆண்டு பி.எஸ்.சி பட்டதாரி படிப்புகளை மேற்கொள்ளலாம். இளங்கலை பட்டம் பெற்றதும், விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பிற விண்வெளி தொடர்பான துறைகளில் முதுகலைப் பட்டப்படிப்பில் இணைந்து படிக்கலாம்.

6 மாதத்தில்... 500 படிப்புகளை முடித்த கேரள மாணவி..!

  இத்துறையில் நிபுணராக விரும்புபவர்கள் பி.எச்டி பட்டப் படிப்பை மேற்கொள்ளலாம். 

 தொழில் வாய்ப்புகள்:- 

விண்வெளி தொழில்நுட்பப் படிப்பானது பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பை வழங்குகிறது என்றே சொல்லலாம். ஒரு நபரின் தகுதிகள் மற்றும் திறன்களைப் பொறுத்து, இஸ்ரோ, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) தேசிய ஏரோநாடிகல் லேபரட்டரீஸ் (என்ஏஎல்) மற்றும் பல்வேறு நிறுவனங்கள் வேலை வாய்ப்பை வாரி வழங்குகின்றன என்றே சொல்லலாம். ஒரு விண்வெளி விஞ்ஞானியானவர் பல்கலைக்கழகங்களில் ஆசிரியராகப் பணியாற்றலாம் அல்லது கல்விக்குழுக்களில் அமர்ந்து ஆவணங்களை வெளியிடலாம், ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழி காட்டலாம், முன் மொழிவுகளை எழுதலாம், மற்றும் நடுவர் ஆவண வெளியீடுகளை எழுதலாம்.

அரசு/ தேசிய ஆய்வகங்கள், விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள், அறிவியல் அருங்காட்சியகங்கள் மற்றும் கோளரங்கங்களில் வேலை செய்யும் வாய்ப்பை வாணியலாளர்கள் மற்றும் வாணியற்பியல் வல்லுநர்கள் பெறுகிறார்கள். மேலும் தொலை நோக்கிகள் வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி செய்தல், மென்பொருளை எழுதுதல் மற்றும் விண்வெளி ஆய்வகங்களில் பல பணிகளை மேற்கொள்ளமுடியும். விண்வெளி சுற்றுலா நிறுவனங்கள், வின்கல உற்பத்தி நிறுவனங்கள், இராணுவ நடவடிக்கைகள், ஆர் டி மையங்கள், விண்கல மென்பொருள் நிறுவனங்கள் பழுது மற்றும் பராமரிப்புப் பகுதியிலும் வேலை வாய்ப்புகள் தாராளமாக உள்ளன. 

கல்லூரிகள்:- 

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் விண்வெளி தொழில்நுட்பத்தில் யுஜி/பிஜி/பிற படிப்புகளை படிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக கேரளாவில் திருவனந்தபுரம், கர்நாடகாவில் பெங்களூர் மற்றும் மும்பை, சென்னை, கரக்பூர், கான்பூர், ராஞ்சி போன்ற இடங்களில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் இத்துறை தொடர்பான படிப்புகளை சிறப்பாக வழங்கி வருகின்றன. 

 ஊதியம்:- 

இத்துறையில் சம்பளம் பெரும்பாலும் கல்வித்தகுதி, பட்டம் பெறும் நிறுவனம் மற்றும் பணியின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்ததாகும். வளரும் விண்வெளி விஞ்ஞானிகள் குறைந்த பட்சமாக ஆண்டுக்கு 5,00,000 முதல் வருமானம் ஈட்டுகிறார்கள். சரியான அனுபவமும் தேவையான அறிவும், கடின உழைப்பும் இத்துறையில் பெற்ற ஒருவர் அடையக்கூடிய உயரமும், சம்பள உச்சவரம்பும் உயர்ந்து கொண்டே போகும் என்பதில் சந்தேகமில்லை. விண்வெளி தொழில்நுட்பத்தில் சாதனைகள் செய்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருப்பதால் இத்துறையில் வேலைவாய்ப்பு எந்த அளவிற்கு அதிகரிக்குமோ அதே போல் சம்பளமும் அதிகரிக்கும் என்பதில் சநதேகமில்லை.

No comments:

Post a Comment