குழந்தைகள் மனதில் உங்கள் பிம்பம் என்ன? - EDUNTZ

Latest

Search here!

Sunday, 29 August 2021

குழந்தைகள் மனதில் உங்கள் பிம்பம் என்ன?

பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மனதில், உங்கள்மீது மதிப்பும் மரியாதையும் இருந்தால்தான், அவர்கள் உங்கள் அறிவுரையைக் கேட்டு நல்ல முறையில் வளர்வார்கள். எனவே பெற்றவர் களைப் பற்றி குழந்தைகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பெற்றோர் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமானது. 

எப்படி அறியலாம்? 

ஐந்து முதல் பத்து வயதுக்குட்பட்ட குழந்தை களிடம், நீங்கள் நேரடியாகக் கேட்டால், தயக்கம், பயம் காரணமாக வெளிப்படையாகப் பேச மாட்டார்கள். எனவே, நண்பர், உறவினர் மூலம் குழந்தைகளிடம் இயல்பாக பேசி உங்களைப் பற்றி விசாரிக்கச் சொல்லுங்கள். 

குழந்தைகள் மனதில் நீங்கள்...? 

'அம்மாவைப் பிடிக்குமா? அப்பாவைப் பிடிக்குமா? எனும் கேள்விக்கு, அவர்களின் பதிலையும், பிடிக்கும் என்பதற்கும், பிடிக்காது என்பதற்கும் அவர்கள் கூறும் காரணங்களையும் அறிந்து கொள்ளுங்கள். குழந்தைகள் மனதில் உங்களைப் பற்றி உருவாகி யிருக்கும் மதிப்பீடுகள் சரியா என்பதை அலசி ஆராயுங்கள். 

குழந்தைகளைப் புரிந்துகொள்ளுங்கள்

 'உங்களுக்காக நான் இவ்வளவு செலவு செய் கிறேன், தியாகங்களை செய்கிறேன். ஆனாலும் என்மீது பாசம் இல்லையே', என்று கோபப்படா தீர்கள். நீங்கள் அருகே இல்லாத குறையை - நீங்கள் வாங்கித் தரும் பொருட்கள் ஈடுகட்டிவிடாது என்பதை உணருங்கள். 

உங்களை மாற்றிக்கொள்ளுங்கள் 

குழந்தைகளின் மதிப்பீடு சரியாக இருந்தால், கட்டாயம் உங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளுங்கள். அவர்களுக்குப் பிடித்ததுபோல நடந்துகொள்ளுங்கள். அவர்களுடன் பேசுங்கள், விளையாடுங்கள், கதை சொல்லுங்கள். இப்படிப்பட்ட அணுகுமுறைதான் உங்களிடம் பிள்ளைகளுக்கு நெருக்கத்தை ஏற்படுத்தும். எப்போதேனும் நீங்கள் யார் மீதோ கோபமாக இருக்கும் நேரத்தில், உங்கள் குழந்தைகள் செய்யும் சின்னச்சின்ன தவறுகள்கூட பெரிதாகத் தோன்றி அவர்களைத் தண்டிக்க நேரிட லாம். அதுபோன்ற சமயங்களில் உடனடியாக அவர் களை அழைத்து சமாதானப் படுத்துங்கள். பகிரங்க மாக மன்னிப்பு கேளுங்கள். 

குழந்தைகளுக்கு விளக்குங்கள் 

வீட்டில் இருக்காமல், நீங்கள் வேலைக்குச் செல்வது அவர்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். வேலைக்குப் போக வேண்டிய குடும்பச்சூழலை, அவர்களிடம் சொல்லி புரிந்து கொள்ளச் செய்வது அவசியம். 'வீடியோ கேம் விளையாடவோ, சத்து இல்லாத உணவுப்பொருட்களை வாங்கவோ கூடாது' என்று, நீங்கள் காட்டும் கண்டிப்புகூட அவர்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். குழந்தைகளின் தவறான கண்ணோட்டத்தை மாற்றுங்கள். அவர்களின் நன்மைக்காகத்தான் கண்டிப்பு காட்டுகிறீர்கள் என்பதை எடுத்துச் சொல்லுங்கள். ஒரு நேரம் கண்டித் தாலும், மற்ற நேரத்தில் நட்போடு பழகுங்கள்.

THANKS TO DAILYTHHANTHI


No comments:

Post a Comment