மேலாண்மை படிப்புக்கான ஜிப்மாட்' தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு 


நாடு முழுவதும் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களில் (ஐஐஎம்) 5 ஆண்டு ஒருங்கிணைந்த மேலாண்மைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 'ஜிப்மாட்' என்ற நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு தேசிய தேர்வு முகமை சார்பில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. நடப்பாண்டுக்கான ஜிப்மாட் நுழைவுத் தேர்வு, கரோனா பரவல் காரணமாக ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. 

கணினி வழியில் நடைபெற உள்ள இந்த தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட்களை என்டிஏ நேற்று வெளியிட்டது. அதன்படி தேர்வர்கள் jipmat@nta.ac.in, www.nta.ac.in ஆகிய இணையதளங்களில் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் jipmat@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாக உரிய விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!