அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் மாதிரி தேர்வு
இணையதளம் மூலம் நடக்கிறது
நீட் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்த அரசு பள்ளி மாணவர்கள் அந்த தேர்வுக்கு தயாராகும் விதமாகவும், அவர்கள் அந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்காகவும் WWW.QUESTIONCLOUD.IN என்ற இணையதளம் மூலம் இலவசமாக நீட் மாதிரி தேர்வு தமிழில் நடத்தப்பட உள்ளது. இதற்கான முயற்சியை மேற்கொண்ட அரசு உயர் அதிகாரியாக பணியாற்றிய அகிலன் ராமநாதன், அந்த இணையதளத்தை தொடங்கி வைத்துள்ளார்.
இந்த இணையதளத்தில் நீட் தேர்வினை தவிர, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு பயன்தரக்கூடிய அனைத்து வகையான தேர்வுகளுக்கும் மாதிரி வினாத்தாள் இடம்பெற்று இருக்கின்றன. அந்தவகையில் இந்த இணையதளத்தில் தற்போது சுமார் 7 ஆயிரத்து 500 மாதிரி வினாத்தாள்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வினாக்கள் உள்ளன.
கொள்குறிவகை வினாக்கள் அடிப்படையில் இந்த மாதிரி தேர்வு நடத்தப்பட இருக்கிறது. தேர்வு எழுதி முடித்த உடனேயே மதிப்பெண்கள் திரையில் காட்டப்படும். அந்த மதிப்பெண்களின் விவரம் பெற்றோர் அல்லது ஆசிரியர்களுக்கு உடனடியாக மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும். தவறாக விடையளித்த கேள்விகளுக்கான சரியான பதிலையும் இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ள முடியும்.
No comments:
Post a Comment