எடை குறைக்க உதவும் சமையலறைப் பொருட்கள் - EDUNTZ

Latest

Search here!

Sunday 22 August 2021

எடை குறைக்க உதவும் சமையலறைப் பொருட்கள்

எடையை குறைக்க வேண்டும் - என்று விரும்புபவர்கள், அதற்குரிய சிறப்பான உணவுகளை தேடி எங்கும் வேண்டியதில்லை. ஒவ்வொரு சமையலறையிலும், நம் உடல் ஆரோக் கியத்தை மேம்படுத்தும் மகத்துவம் நிறைந்த பொருட்கள் இருக்கின்றன. அவற்றின் சத்துக்கள் எளிதாக நம் உடலில் சேர வேண்டும் என்பதற்காகவே, நமது முன்னோர்கள் உணவுப் பொருள் வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். சமையலறையில் நாம் உபயோகப்படுத்தும் பொருட்கள், எவ்வாறு உடல் எடை குறைப்புக்கு உதவுகின்றன என்று பார்ப்போம். 

பூண்டு 

குறைந்த கலோரிகள் கொண்ட பூண்டில் உள்ள வேதிப்பொருட்கள், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து, எடையை குறைக்க உதவுகின்றன. 

இஞ்சியை உட்கொள்ளும்போது, வயிற் நில் ஏற்படும் வாயு மற்றும் வீக்கத்தை நீக்கு கிறது. தினமும் இஞ்சியை உணவில் சேர்த்து வந்தால் வேகமாக எடை குறையும். 
வைங்கப்பட்டை 

வவங்கப் பட்டையில் உள்ள சத்துகள், எடையை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. காலையில் 5 மற்றும் காபி சாப்பிடும்போது, அதில் சிறிதளவு லவங்கப்பட்டை பொடியை சேர்த்து குடித் தால், தேவையற்ற கொழுப்பு வேகமாக குறையும். மிளகாய் மிளகாயில் குறைந்த அளவு கலோரிகள் உள்ளன. மேலும், காரத்தை உட்கொள்ளும் போது, உடலில் உள்ள கலோரிகள் வேக மாக எரிக்கப்படுகின்றன. 

மிளகு 

மிளகில் உள்ள "பைப்பிரின்' எனும் வேதிப்பொருள், ஜீரண சக்தியைத் தூண்டி வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்குகிறது. இதனால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேருவது தடுக்கப்படுகிறது. 

கடை கடுகில் உள்ள 'செலினியம்" முறையான தைராய்டு செயல்பாட்டை காக்குவிக்கிறது. இதனால் உடல் எடை குறைகிறது. முட்டை புரதச்சத்தின் முக்கியமான மூலப்பொருள் முட்டை. உடலுக்கு தேவையான புரதம் கிடைக்கும் போது, உடல் இருக்கும். தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வருவதால், கட்டுக்கோப்பான உடலுக்குத் தேவையான புரதத்தை பெற முடியும். 

தக்காளி 

பசி அதிகரிக்கும் வேளையில் தக்காளி பழத்தை சாப்பிடும் போது, பசி குறைவ தோடு, உடலுக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கின்றன. அதுமட்டுமில்லாமல், தக்காளி குறைந்த அளவு கலோரிகள் கொண்டது. மஞ்சள் வயிறு பிரச்சினைகள், வளர்சிதை மாற்றக் கோளாறுகள், உடல் பருமன் போன்ற பல சிக்கல்களை சமாளிக்க மஞ்சள் உதவும். மஞ்சள் உடல் பருமனுடன் தொடர்புடைய அழற்சியைக் குறைக்கும்.



No comments:

Post a Comment