அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
யில் கரோனா பேரிடர் மற்றும் கரோனா நோய் தடுப்புப் பணிகள் மேற்
கொள்ள தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சி
யர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா
நோய் தடுப்புப் பணிகள் மேற்கொள்ள ரேடியோகிராபர் 5, டயாலிசஸ்
டெக்னீசியன் 10, இ.சி.ஜி டெக்னீசியன் 5, சி.டி. ஸ்கேன் டெக்னீசியன்
5, மயக்கவியலாளர் 15, மருந்தாளுநர்கள் 5பணியிடங்கள் தலா ரூ.12,000
மாத ஊதியம் அடிப்படையிலும், லேப் டெக்னீசியன் 5 பணியிடங்கள்
ரூ.15,000 மாத ஊதியம் அடிப்படையிலும் வழங்கப்படும்.
இப்பணியி
டங்கள் முற்றிலும் தற்காலிகமானது மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 6
மாதங்களுக்கு மட்டும் நிரப்பப்பட உள்ளது. மேலும், இப்பணியிடங்கள்
எக்காரணங்கள் கொண்டும் பணி வரன்முறை அல்லது நிரந்தரம் செய்
யப்படமாட்டாது.
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வி தகு
தியின் சான்றிதழ்களின் நகல்கள், புகைப்படத்துடன் முதல்வர், அரசு
மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அரியலூர் - 621704 என்ற முகவ
ரிக்கு ஆக.10 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ
அனுப்பிவைக்கலாம்.
No comments:
Post a Comment