12-ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற வசதியில்லாத மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு தேவையான கல்வி உதவித் தொகை வழங்க ஆனந்தம் யூத் ஃபவுண்டேஷனுக்கு அனுமதி வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு - EDUNTZ

Latest

Search here!

Thursday, 26 August 2021

12-ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற வசதியில்லாத மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு தேவையான கல்வி உதவித் தொகை வழங்க ஆனந்தம் யூத் ஃபவுண்டேஷனுக்கு அனுமதி வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு

வசதியில்லாத மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு தேவையான கல்வி உதவித் தொகை வழங்க ஆனந்தம் யூத் ஃபவுண்டேஷனுக்கு அனுமதி வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு

தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள், 

பள்ளிக்கல்வி - Anandham Youth Foundation - அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற வசதியில்லாத மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு தேவையான கல்வி உதவித் தொகை வழங்க அனுமதி அளித்தல் - தொடர்பாக, 

பார்வை 

சென்னை-24, Anandham Youth Foundation நிறுவனர் திரு.எஸ். செல்வகுமார் அவர்களின் கடிதம் நான் 29.07.2021. 

பார்வையில் காணும் Anandham Youth Foundation பல துறைகளில் உள்ள சமூக ஆர்வம் மிக்க இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனம், "ஆனந்தம்" அமைப்பின் மூலம் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்களை எடுத்த மாணவர்களின் உயர் கல்வி தொடர வசதியில்லாத மாணவ / மாணவியர்களுக்கு 100% கல்வி உதவித் தொகை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 9 ஆண்டுகளில் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர்,கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்களின் பரிந்துரை அடிப்படையில் பெறப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து, பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய மாணவர்களை தேர்ந்தெடுத்து அவளுக்கு 100% கல்வி உதவித் தொகையுடன் உயர்கல்வி வழங்கி வருவதாகவும், தற்போது "ஆனந்தம்" அமைப்பின் மூலம் 491 மாணவர்கள் உயர் கல்வி பயின்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, (மேலும் படிக்கவும் செயல்முறை இணைக்கபடபட்டுள்ளது) DOWNLOAD DSE PROCEEDINGS HERE










No comments:

Post a Comment