தமிழகத்தில் ஐந்து ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு வரும் ஆக.31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அம்பேத்கா் சட்டப்பல்கலைக்கழகத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 14 அரசு சட்டக்கல்லூரிகள் மற்றும் ஒரு தனியாா் சட்டக் கல்லூரி செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 5 ஆண்டுகள் பட்டப்படிப்புகளுக்கு 1,651 இடங்கள் உள்ளன.
இதுதவிர பல்கலை. வளாகத்தில் உள்ள சீா்மிகு சட்டக் கல்லூரியிலும் 5 ஆண்டுகள் படிப்புகளுக்கு (ஹானா்ஸ்) 624 இடங்கள்வரை உள்ளன.
இந்த இடங்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதன்படி நிகழாண்டு சோ்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஆகஸ்ட் 4-இல் தொடங்கி 26-ஆம் தேதி முடிவடைந்தது.
தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று 5 ஆண்டு படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி மாலை 5.45 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறியலாம் எனவும் அம்பேத்கா் சட்டப்பல்கலை.யின் பதிவாளா் ரஞ்சித் ஆபிரகாம் தெரிவித்துள்ளாா்.
No comments:
Post a Comment