பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்களுக்கு
அரியர் தேர்வு எழுத மீண்டும் வாய்ப்பு
சென்னை
பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்து நீண்டகாலமாக அரியர்
வைத்திருக்கும், முன்னாள் மாணவர்களுக்கு மீண்டும் சிறப்புத்
தேர்வு எழுத உயர்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக உயர்கல்வித் துறை வெளியிட்ட அரசாணை:
பட்டயக் கல்வியை முடித்து நிலுவைப்பாடங்களில் தேர்ச்சி பெறாமல்
உள்ள முன்னாள் மாணவர்களுக்கு 2019-ம் ஆண்டு அக்டோபர் மற்றும்
2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இதில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு 2020-ம் ஆண்டு டிசம்பர்
மாதம் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டது.
கரோனா காரணமாகத் தேர்வு எழுதவும், தேர்ச்சி பெறாத மற்றும்
தேர்வு கட்டணம் செலுத்த முடியாமலும் தவறவிட்ட மாணவர்களுக்கு
வரும் 4 பருவத் தேர்வுகளில் சிறப்பு அனுமதி வழங்கவேண்டும் என்றும்
இதற்கான தேர்வு கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் நிர்ணயிப்பது +
தொடர்பாக ஆணை வழங்கவேண்டும் என்றும் தொழில்நுட்பக்
கல்வி இயக்கக தேர்வு வாரியத் தலைவர் அரசைக் கேட்டுக்
கொண்டுள்ளார்.
அதன்படி 2021-ம் ஆண்டு மற்றும் 2022-ம் ஆண்டுகளில் நடைபெறும்
பருவத் தேர்வுகளின்போது மட்டும் சிறப்புத் தேர்வு எழுத வாய்ப்பு
வழங்கப்படுகிறது. அதேபோல, தேர்வு எழுத விரும்பும் பாடங்களுக்கு
தலா ரூ.65 தேர்வு கட்டணமாகவும், ஒவ்வொரு வாய்ப்புக்கும் பதிவுக்
கட்டணமாக ரூ.750-ம் வசூலிக்கத் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்துக்கு
அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment