வாகனத்தின் வலது கீழ் பகுதியில் ஆயில் டேங்க் உள்ளது. பெரும்பாலானோர் ஸ்பீடு பிரேக்கர் மற்றும் பெரிய கல் இருப்பது தெரியாமல் வேகமாக செல்லும்போது ஆயில் டேங்க் மீது இடித்து பாதிப்படைய அதிக வாய்ப்பு உள்ளது.
ஸ்பீடு பிரேக்கர் அல்லது கல் இருப்பது தெரியாமல் அதன் மீது இடித்து விட்டால் வாகனத்தை உடனே நிறுத்தி விடுவது நல்லது. வாகனத்தை நிறுத்தி அடிபட்ட பாகத்தில் அதிக சேதாரம் இல்லை என்று உறுதி செய்த பின்பு வாகனத்தை அருகில் இருக்கும் பணிமனைக்கு கொண்டு சென்று அடிபட்ட பாகத்தை பரிசோதித்து கொள்வது நல்லது.
ஏனென்றால் ஆயில் டேங்கில் அதிக அளவில் பாதிப்பு ஏற்படும்போது உள் பகுதியில் இருக்கும் ஆயில் ஸ்டிரெய்னர் உடைய வாய்ப்பு உள்ளது. இது ஆயில் பம்ப்புடன் இணைக்கப்பட்டிருக்கும். இது தெரியாமல் வாகனத்தை தொடர்ந்து இயக்கினால் என்ஜின் எண்ணெய் சுழற்சியில் பாதிப்பு ஏற்பட்டு என்ஜின் பழுதாக வாய்ப்புகள் உள்ளன. என்ஜினுள் எண்ணெய் ஓட்டம் முறையாக நிகழவில்லை என்றால் காரின் முன்புற கிளஸ்டரில் எண்ணெய் தொடர்பான எச்சரிக்கை சமிக்ஞை விளக்கு ஒளிரும். அதை வைத்து எண்ணெய் ஓட்டம் முறையாக நிகழவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
சில வாகனங்களில் ஆயில் டேங்க் அதிக அளவில் பாதிப்படையும்போது அதோடு என்ஜின் பிளாக்கும் உடைந்து விட வாய்ப்பு உள்ளன.
இதனால் என்ஜினின் கீழ்பகுதி முழுவதையும் மாற்றும் சூழ்நிலை ஏற்படும். இது மிக பெரிய பொருட்சேதம் ஆகும். இது மாதிரியான விபத்துகள் நடக்காமல் இருக்க ஸ்பீடு பிரேக்கர் மற்றும் கல் இருக்கும் பகுதியில் வாகனத்தை அதி வேகமாக இயக்காமல் மிதமான வேகத்தில் இயக்கும் போது என்ஜினின் கீழ் பகுதியில் பெரிய அளவுக்கு சேதம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
கார் பயன்படுத்தும் அனைவரும் தங்களுடைய காரில் குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை தவறாமல் ஆயில் மாற்றுவதை மேற்கொண்டால் பெரும்பாலான பிரச்சினைகளை தவிர்க்கலாம், குறிப்பாக என்ஜினில் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.
அதுதவிர, குறிப்பிட்ட இடைவெளியில் தவறாமல் ஆயில் சர்வீஸ் செய்வதால் என்ஜினின் தேய்மானம் குறைந்து சத்தம் அதிகரிக்காமல் அதிக நாட்கள் வரை பழுதில்லாமல் இயங்கும். பெட்ரோல், டீசல் காரை பயன்படுத்துபவர்கள் 10 ஆயிரம் கி.மீ அல்லது 12 மாதங்கள் இதில் எது முதலில் வருகிறதோ அதனைக் கணக்கில் கொண்டு தவறாமல் என்ஜின் ஆயிலை மாற்றி விடுவது நல்லது. பொதுவாக ஆயில் இதன் அடர்வு ஆனது சுமார் 10 ஆயிரம் கி.மீ. (அல்லது) 12 மாதங்கள் வரை மாறாமல் இருக்கும், அதன் பிறகு அதன் அடர்த்தி குறைந்து என்ஜினில் தேய்மானத்தை அதிகரிக்கும். ஆகவே தான் கார்களில் தவறாமல் 10 ஆயிரம் கி.மீ. (அல்லது) 12 மாதங்களுக்கு ஒரு முறை ஆயில் மாற்றுவது சிறந்தது.
No comments:
Post a Comment