கோயில் பாதுகாப்புப் பணி: முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் - EDUNTZ

Latest

Search Here!

Friday, 6 August 2021

கோயில் பாதுகாப்புப் பணி: முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்

கோயில் பாதுகாப்புப் பணி: முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் 

தருமபுரி மாவட்ட கோயில்கள் பாதுகாப்புப் பணியில் சேர விருப்புமுள்ள முன்னாள் படைவீரர்கள் விண் ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் உள்ள 17 கோயில்களில், பாதுகாப்பு பணியிடம் காலியாக உள்ளது. அப்பணியிடத்தில் முன்னாள் படைவீரர்கள் சிறப்புக் காவலராக பணியமர்த்தப்பட உள்ள னர். எனவே விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் கோயில் பாதுகாப்புப் பணியில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு ரூ.8,000 குறைந்தபட்ச மாத ஊதியம் வழங்கப்ப டும். மேலும் 62 வயது வரை பணிபுரியலாம். 

61 வயதிற்குள் உள்ள முன்னாள் படைவீரர்களும் கோயில் பாதுகாப்புப் பணி யில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம். எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள், எச்.49 காளியப்பா நிவாஸ், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஒட்டப்பட்டி என்கிற முகவரி யில் அமைந்துள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவ லகத்தை நேரில் அணுகி விருப்பத்தினை கடிதம் மூலம் தெரிவிக் கலாம். மேலும் விவரங்களுக்கு, 04342-297844 என்கிற தொலை பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது என்று தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment