கூந்தல் கருமையாக செழித்து வளர..! - EDUNTZ

Latest

Search here!

Wednesday 11 August 2021

கூந்தல் கருமையாக செழித்து வளர..!



கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்குத் தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும். 

 வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும். தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும். 

 மருதாணி, செம்பருத்தி, கறிவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை அரைத்து தலையில் பூசி குளிக்கவும். புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ இரண்டையும் அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சீகைக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது. கூந்தல் பட்டுப்போல் காட்சியளிக்கும். 

 வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவதையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும். 

 இரவில் நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும். 

 இஞ்சியைத் துருவி சாறு பிழிந்து, தேங்காய் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை நரை முடியின் மீது தடவி, 10 நிமிடம் ஊறவைத்து குளித்தால் வந்தால் முடி நன்கு வளரும். 

 கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்து பொடி செய்து, தேங்காய்ப்பாலில் குழைத்து, தலையில் தடவி ஊறியபின் குளித்தால், விரைவில் முடி நன்கு செழித்து வளரும்.

No comments:

Post a Comment

Comments System

[blogger][disqus][facebook]