வீட்டின் அழகுக்கு அழகு சேர்ப்பவை வண்ணங்களும் அலங்காரங்களும்தான். அழகான வீடு கட்டி நாம் விரும்பும் வகையில் வண்ணம் பூசுவோம். பிடித்த வடிவங்களில் பர்னிச்சர்கள் வாங்கி வீட்டை அழகுப்படுத்துவோம். அதெல்லாம் சரிதான். வீட்டுக்கு உண்மையான அழகை தேடித்தருவது இயற்கைதான்.
முன்பெல்லாம் தோட்டம் வைக்க இடம் இருக்கும். அதில் நமக்கு விருப்பமான செடிகளை வைத்து அழகு பார்ப்போம். இன்றைக்கு இட நெருக்கடியில் நாம் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் குறுகிப்போய்விட்டோம். என்றாலும் அந்த இடத்துக்குள் நாம் செடி, கொடிகள் வளர்க்கலாம்.
கொடிகள் என்றதும் பந்தல் கட்ட வேண்டும் என கற்பனை செய்ய வேண்டாம். இவற்றுக்காக பிரத்தியேக கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு
பணிவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-8-2021
WANTED For a NHAI Project Works | PROJECT MANAGER | Sr. SITE ENGINEER(Civil)
வங்கியில் மானேஜர் பணி
பணி | விண்ணப்பிக்க கடைசி தேதி:
3-9-2021
எந்த இடங்களில் படர வேண்டுமென நினைக்கிறீர்களோ அந்த இடத்தில் படர வசதிகளை ஏற்படுத்திவிட்டால் போதும். போதுமான நில வசதி இல்லாவிட்டாலும் பரவாயில்லை, பெரிய தொட்டிகளில் கூட விதைகளை தூவி இதுபோன்ற செடி-கொடிகளை வளர்த்துவிடலாம்.
பூக்களை தரும் கொடிகளில் இரு வகை உள்ளன. சில வகை கொடிகளில் தண்டுக்கு நெருக்கமாக பூ பூக்கும், சிலவற்றில் பூக்கள் கொத்துக் கொத்தாய் பூத்துக் குலுங்கும். முதல் வகை கொடிகளை தூண்களில் படரவிடலாம்.
தூணோடு தூணாக அழகாக படரும். 2-ம் வகை கொடிகளை கூரைமீது படர விடலாம். இது கூரையில் பூக்களின் தோரணங்களாக மலர்ந்து பார்ப்போரை கவரும்.
செங்குத்தான இடமா அல்லது கிடைமட்ட பகுதியா என்பதை பொறுத்து தேவையான கொடிகளின் விதைகளை வாங்கிக் கொடிகளை வளர்த்து வீட்டை அழகுப்படுத்தலாம். வீடுகளின் ஜன்னல்கள், கதவுகள், வீட்டின் முன்புறச் சுவர்கள் போன்ற இடங்களில் எல்லாம் தேவைக்கேற்ப கொடிகளை படர விட்டு வீட்டை வண்ணமயமாக்கலாம். பூக்கள் மிகுந்த கொடிகள் வண்ணமயமான தோற்றத்தை தருவதுடன் நறுமணத்தையும் பரப்பும். மேலும் இதுபோன்ற கொடிகள் நம் இருப்பிடத்தை அழகாக மாற்றிவிடும்.
No comments:
Post a Comment