வேலூர்: வேலூர் மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் மத்திய
ஆயுதப்படை பணிக்கு விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என
ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மத்திய ஆயுதப்
படை, அசாம் ரைபிள் படையில் காவலர் பணியிடங்களுக்கு முன்னாள்
ராணுவத்தினருக்கான ஆட்தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கு தகுதியுள்ள
முன்னாள் படை வீரர்கள் வரும் 31-ம் தேதிக்குள் https://ssc.nic.in என்ற
இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பை
வேலூர் மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் பயன்படுத்திக்கொள்ள
வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
முன்னாள் ராணுவத்தினருக்கு பணி வாய்ப்பு
No comments:
Post a Comment