மூன்றாம் கட்ட ICT பயிற்சியில் கலந்துக்கொள்ளும் ஆசிரியர்கள் எண்ணிக்கை கோருதல் - EDUNTZ

Latest

Search here!

Wednesday, 25 August 2021

மூன்றாம் கட்ட ICT பயிற்சியில் கலந்துக்கொள்ளும் ஆசிரியர்கள் எண்ணிக்கை கோருதல்

கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, கிருஷ்ணகிரி மாவட்டம் அவர்களின் செயல்முறைகள் 

முன்னிலை: திருமதி.கா.பெ.மகேஸ்வரி, எம்.ஏ.,பி.எட்., 

ந.க.எண்.412 Training/pub/2021 நாள்: 24.08.2021 

பொருள்: 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, கிருஷ்ணகிரி மாவட்டம் - 2021-22-ஆம் கல்வி ஆண்டு - அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல் - மூன்றாம் கட்ட பயிற்சி - 31.08.2021 முதல் 05 நாட்கள் - EMIS, Hi-Tech Lab Usage மற்றும் ICT : ( ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சி வழங்கப்பட உள்ளதால் - பயிற்சி கலந்துக்கொள்ளும் ஆசிரியர்கள் எண்ணிக்கை கோருதல் - வழங்குதல் - சார்பு. 

பார்வை: 

1. மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை அவர்களின் கடித ந.க.எண்.01845/அ11/பயிற்சி/ஒபக/2021 நாள்:06.08.2021. 

2. மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை அவர்களின் Standard Operating Procedure நாள்;11.08.2021. 

3. சென்னை-6, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்கக தொலைப்பேசி செய்தி நாள்:25.08.2021. 

பார்வை-1-ல் காணும் கடிதத்தின்படி, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல், EMIS, HETech Lab Usage மற்றும் ICT ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு அதற்கான கருத்தாளர்கள் மற்றும் உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தின் பொறுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, முதற் கட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு 12.08.2021 முதல் 18.08.2021 வரை 05 நாட்கள் பயிற்சி முடிக்கப்பட்டு, இரண்டாம் கட்ட பயிற்சி ஆசிரியர்களுக்கு 23.08.2021 முதல் 27.08.2021 வரை 05 நாட்கள் நடைபெற்று வருகிறது. மேற்காண் பயிற்சி அனைத்து நிலை ஆசிரியர்களுக்கு பல கட்டங்களாக வழங்கப்பட உள்ளது. எனவே, மூன்றாம் கட்ட பயிற்சியானது 31.08.2021 முதல் 05 நாட்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் பெறப்பட்ட ஆசிரியர்களுக்கு ICT பயிற்சி வழங்கப்பட உள்ளது






No comments:

Post a Comment