ஒருங்கிணைந்த புவி-
விஞ்ஞானி
(முதன்மை) தேர்வு முடிவு - 2021
மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) 2021 ஜூலை 17ம் தேதி முதல்
18ம் தேதி வரை நடத்திய ஒருங்கிணைந்த புவி-விஞ்ஞானி (முதன்மை) எழுத்து
தேர்வு - 2021 அடிப்படையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள பதிவு எண்களுடன் கூடிய
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் / ஆளுமை தேர்வுக்கு தகுதிபெற்றுள்ளனர்.
2 விண்ணப்பதாரர்களின் இந்த தேர்வு தற்காலிகமானது. அனைத்து
விதத்திலும் தகுதியுடையவர்களாக காணப்படுவதற்கு உட்பட்டது. இந்த
விண்ணப்பதாரர்கள், தங்களின் வயது, கல்வி தகுதி, ஜாதி, மாற்றுத் திறன்
சான்றிதழ் ஆகியவற்றுக்கான அசல் சான்றிதழ்களை நேர்காணலின் போது
தாக்கல் செய்ய வேண்டும். அதனால், அவற்றை தயாராக வைத்திருக்கும்படி,
விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
3. தேர்வு விதிமுறைகள் படி, இந்த அனைத்து விண்ணப்பதாரர்களும், யுபிஎஸ்சி
இணையதளத்தில் upsconline.nic.in உள்ள விரிவான விண்ணப்ப படிவத்தை
(Detailed Application Form (DAF) பூர்த்தி செய்து, ஸ்கேன் செய்யப்பட்ட சான்றிதழ்
நகல்களுடன் ஆன்லைனில் தாக்கல் செய்ய வேண்டும். விரிவான விண்ணப்ப
படிவம் 24.08.2021 முதல் 7.9.2021
மணி வரை யுபிஎஸ்சி
இணையதளத்தில் இருக்கும்.
4.ஆளுமை தேர்வுக்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களின் நேர்காணல்களின்
தேதி யுபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும்.
நேர்காணலுக்கான தேதி விண்ணப்பதாரருக்கும் தெரிவிக்கப்படும். அதனால்
விண்ணப்பதாரர்கள் தங்கள் மின்னஞ்சலை பார்க்கும்படி
அறிவுறுத்தப்படுகின்றனர்.
5. யுபிஎஸ் தனது வளாகத்தில் உதவி மையத்தை அமைத்துள்ளது. தேர்வு / முடிவு
தொடர்பான தகவல்களை விண்ணப்பதாரர்கள் அனைத்து வேலை நாட்களிலும்
மணி முதல்
மணிவரை நேரிலும்,
(011)-23385271/23381125/23098543 என்ற தொலைப்பேசி எண்களிலும் பெறலாம்.
பதிவு எண்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்:
No comments:
Post a Comment