பத்திரிக்கைச் செய்தி
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, சட்டப்
பிரிவு 12 (1) (சி) ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை
வகுப்பில்
ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின்
குழந்தைகளுக்கான சேர்க்கை இணைய வழியாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
25 %
மேற்காண் திட்டத்தில் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக
விண்ணப்பிக்க 05.07.2021 முதல் 03.08.2021 வரை வாய்ப்பு வழங்கப்பட்டது.
நாளது தேதி வரை
73,086 விண்ணப்பங்கள் இணைய வழியில் பெறப்பட்டுள்ளன. தற்போது கொரோனா தீநுண்மி
பொதுமுடக்கத்தை கருத்தில் கொண்டு இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான கால
அவகாசம் 13.08.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர்
(RTE மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில், வரும் 13-ம் தேதி வரை
.
.
மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகத்தின் கோரிக்கையை ஏற்று, கல்வித்துறை உத்தரவு.இன்று வரை 73,086 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.)
No comments:
Post a Comment