தமிழ்நாடு அரசு
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்,
சென்னை-600 006.
தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை 2021-2022
ஆம் கல்வியாண்டில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி
நிறுவனங்கள், ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி
நிறுவனங்களில், தொடக்கக் கல்விப் பட்டயப் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
|2. விண்ணப்பங்கள் இணையதளத்தில் https://scert.tnschools.gov.in என்ற
முகவரியில் 16082021 அன்று காலை 10.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
இவ்விணையதளத்தில் உரிய கட்டணத்தைச் செலுத்தித் தங்களது விவரங்களைப்
பதிவேற்றம் செய்யலாம்.
கட்டணம் செலுத்துவதற்குத் தங்களது பற்று அட்டை (Debit
Card), கடன் அட்டை (Credit Card) மற்றும் இணைய வங்கிச் சேவை (Internet
Banking) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்திச் செலுத்தலாம். விண்ணப்பக்
கட்டணமாகப் பொதுப்பிரிவு | பிற்படுத்தப்பட்ட வகுப்பு / மிகவும் பிற்படுத்தப்பட்ட
வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு ரூ.500/-வும், மாற்றுத்திறனாளிகள் / ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினருக்கு ரூ.250/-வும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள்
மேற்கண்ட இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கத் தங்களது விவரங்களை
ஒவ்வொன்றாக உள்ளீடு செய்து, அனைத்து விவரங்களையும் பதிவேற்றியபின் சேமிப்பு
(Save) பொத்தானை அழுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தங்கள் விவரங்கள்
அனைத்தையும் உள்ளீடு செய்து சரிபார்த்த பிறகு இறுதியாக அப்பக்கத்தின் கீழுள்ள,
'Submit' பொத்தான் உதவியுடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். பிறகு
பணம் செலுத்துவதற்கான தளம் உருவாகும். இத்தளத்தில் பனம்செலுத்தியபிறகுதான்
தங்களது விண்ணப்பம் முழுமையாகப் பதிவேற்றம் செய்யப்படும்.
No comments:
Post a Comment