தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், அம்பத்தூர்
தொழிலாளர் மேலாண்மையில் பட்ட மேற்படிப்பு மற்றும் பகுதி நேர பட்டய
படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 1.9.2021
சென்னை - 98,
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை)
மற்றும் பிஜி.டி.எல்.ஏ (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப்படிப்பு), டி.எல்.எல் ஏ.எல்
(தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (வார இறுதி) பட்டய படிப்புகளும் நடத்தப்பட்டு
வருகின்றன. எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்புகள் சென்னை பல்கலைக்கழகத்தால்
அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பி.ஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் ஏ.எல் படிப்புகள் தமிழக அரசின்
அங்கீகாரத்துடன் நடைபெற்று வருகிறது.
எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை), பி.ஜி.டி.எல்.ஏ, மற்றும் டி.எல்.எல். ஏ.எல் ஆகிய பட்ட மேற்படிப்பு /
பட்டய படிப்புகள் தொழிலாளர் நல அலுவலர் பதவிக்கு பிரத்யேக கல்வித்தகுதியாக தமிழ்நாடு
தொழிற்சாலைகள் தொழிலாளர் நல அலுவலர்கள் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது. இக்கல்வி
நிலையத்தில் பயின்ற மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளராக
பணிபுரிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் தொழிலாளர் உதவி ஆணையர் மற்றும்
தொழிலாளர் உதவி ஆய்வர் பதவிகளுக்கு எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை) மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ. ஆகிய
பட்ட மேற்படிப்பு / பட்டய படிப்புகளை முன்னுரிமை தகுதிகளாக நிர்ணயம் செய்து அரசு ஆணை
வெளியிட்டுள்ளது.
விருப்பமுள்ள ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற மாணவர்கள் முதுநிலை பட்ட மற்றும்
பட்டயப்படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் மதிப்பெண் அடிப்படையில் அரசு
விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
No comments:
Post a Comment